பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

10. சுந்தரர் திருமடங்கள்

1. திருநெல்வேலி

திருநெல்வேலியில் ஆலாலசுந்தரன் திருமடம் என்றொரு மடம் இருந்தது. இம்மடத்தில் இருக்கும் தபசியரில் ஒருவராகச் சேய்ஞலூர் திருவெண்காடுடையான் அனவரதன்... என்வன் மாறவர்மன் சுந்தர பாண்டியனுடைய பதினேழாம் ஆட்சியாண்டுக் (கி. பி. 1233க்குரிய) கல்வெட்டொன்றில் குறிக்கப் பெறுகிறான்.

2. காளையார் கோயில்

காளையார் கோயிலில் ஆலாலசுந்தரன் திருமடம் இருந்தமை மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்திகள் பூரீவீரபாண்டியனுடைய பதினான்காவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் கண்டது. ஆலாலசுந்தரன் திருமடத்து முதலியார். சம்பந்தப் பெருமாளுக்குத் தரப்பெற்ற நிலக்கொடை இக்கல்வெட்டில் இயம்பப் பெறுவது.

3. திருஎதிர்கொள்பாடி

இந்நாளில் மேலைத் திருமணஞ்சேரி என்று வழங்கும் எதிர்கொள் பாடியில் கீழைத்திரு வீதியில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடம் இருந்தது.

4. காஞ்சி

கச்சித் திருவேகம்பத்தின் கிழக்குக் கோபுரத்திற்கருகில் ஆலாலசுந்தரன் திருமடம் இருந்தது என்பது கல்வெட்டொன்றில் கண்ட செய்தி.

1. S. I. I. Vol. V. No. 422.

2. S. I. I. Vol. V. No. 432.