பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 87

11. பிற செய்திகள்

1. திருஞானசம்பந்தீச்வரம்

தஞ்சைமாவட்டம் திருப்பாலத்துறையில் உள்ள மூன்றாம் இராசராசனுடைய இருபதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (437 of1912) திருப்பாலத்துறைக் கோயிலில் திருநடை மாளிகையின் கிழக்குப் புறத்தில் திருஞான சம்பந்தீச்வரம் என்னும் சுற்றாலயம் இருந்தமையைக் கூறுகிறது.

பொருவனுர் உடையான் அரையன் காறையழகன் என்வன் திருஞான சம்பந்தீசுவரமுடையாரை எழுந்தருளிவித்தான். திருச்சிற்றம்பல நல்லூரிலும் இராச கம்பீர நல்லூரிலும் நிலம் வழங்கினான்' என்பது கல்வெட்டிற் கண்ட செய்தி.

2. திருநட்டப் பெருமான் ஆளுடையபிள்ளை

இரண்டாம் இராசாதிராசனின் நான்காவதாட்சி யாண்டுக்குரிய சீகாழிக் கல்வெட்டொன்று. 'திருஞானசம் பந்தரைத் திருநட்டப் பெருமான் ஆளுடைய பிள்ளை' எனக் குறிக்கிறது.

இடது கையில் பொற்கிண்ணமும், வலது கை சுட்டிக்

5 ற (LP 巴山 ԼԳ

காட்டும் சூசி முத்திரையும் உடையதாக அமையும் திருஞானசம்பந்தர் திருக்கோலத்தைக் கல்வெட்டு இவ்வாறு

குறிப்பதாகக் கொள்ளலாம்.

வெண்மணி கிழான் ஆட்கொண்ட நாயகன் என்பவன் நாள் வழிபாடு திருநாள் அமுதுபடி முதலானவற்றுக்காகக் கழுமலத்தில் முக்காணி அரைக்காணிக் கீழ் ஒரு மா நிலம் தந்தமை கூறுகிறது இக்கல்வெட்டு (379 of 1918).