பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

கல்வெட்டில் தேவார மூவர்


கூறுவனவும்‌ தேவார மூவர்‌ நினைவை மக்கள்‌ போற்றிய வகைமைகளும்‌ இந்நூலில்‌ நன்காய்ந்து கூறப்பெற்றுள்ளன.

திருக்குறள்‌ இருக்கை

நாலாயிரத்‌ திவ்யப்‌ பிரபந்தமும்‌ திருக்குறளும்‌, பெரிய புராணமும்‌ முதுமொழிமேல்‌ வைப்பு நூல்களும்‌, திருத்தொண்டர்புராணத்தில்‌ திருக்குறள்‌ என்னும்‌ ஆய்வு நூல்களை அண்ணாமலைப்‌ பல்கலைக்கழகத்‌ திருக்குறள்‌ இருக்கையில்‌ பணியாற்றியபோது இவர்‌ இயற்றினார்‌. இவை இன்னும்‌ அச்சில்‌ வரவில்லை.

திருக்குறள்‌ மூலமும்‌ பரிப்பொருள்‌ உரையும்‌ என்னும்‌ நூலைப்‌ பதிப்புக்காகச்‌ செப்பனிட்டதும்‌ இவ்விருக்கையில்‌ பணிபுரிந்த காலத்திலேயே ஆகும்‌. அந்நூல்‌ வெளிவந்துள்ளது.

இவர்‌, கடினமாக உழைத்து மறுப்புக்கு இடமற்ற ஆய்வுக்‌ கருத்துகளையே வெளியிடும்‌ இயல்புடையவர்‌ என்பதைத்‌ தமிழறிஞர்கள்‌ நன்கறிவர்‌. இத்தகு பெருமகனாரின்‌ நூல்கள்‌ பல்லாண்டுகளாக வெளியிடப்‌ பெறாமலிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தும்‌. அவர்தம்‌ அரிய கருத்துக்‌ கருவூலங்கள்‌ அவர்‌ பெயரிலேயே விரைந்து தமிழகத்திற்க வழங்குவது நனிநாகரிகம்‌ ஆகும்‌.

திருவருட்பாவில்‌ பெரும்‌ பொருட்குவியல்‌

திருவருட்பாவின்‌ விண்ணப்பக்‌ கலிவெண்பாவை நுண்ணாய்வு செய்து, 1990ஆம்‌ ஆண்டு வெளியிட்டார்‌. மூன்றாம்‌ திருமுறை நுண்ணாய்வும்‌ அதே ஆண்டு வெளிவந்தது. திருவடிப்‌ புகழ்ச்சி நுண்ணாய்வும்‌ 1991ஆம்‌ ஆண்டு வெளியிட்டார்‌. இம்‌ மூன்று நுண்ணாய்வு நூல்களும்‌ சாத்திரச்‌ செய்திகளும்‌ ஞானநூற்‌ செய்திகளும்‌ செறிந்தவை. விளக்கம்‌ பெறாத பல சொற்களுக்குரிய விளக்கங்களை அறியத்‌ தருபவை.

கடல்‌ கடந்த தமிழர்களுக்கு
சைவத்‌ தமிழ்நூல்கள்‌

தென்னாப்பிரிக்கத்‌ தமிழர்களுக்கான சைவத்‌ தமிழ்‌ நூல்கள்‌ பலவற்றை இவர்‌ வெளியிட்டார்‌. ஞானசம்பந்தர்‌ தேவாரத்திரட்டு,