பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லா.ச.ரா.

5

ஆளின் முக வெளிறு தனி 'டால்' அடித்தது. துல்லியமான வெள்ளை ஆடை அடுத்து நேர்ந்ததைக் குருக்கள் எதிர்பார்த்திருக்க முடியாது. கையில் மிச்சக் குங்குமத்தை அவர் குருக்கள் நெற்றியில் தீட்டினார். குருக்கள் திடுக்கிட்டுப் போனார். கூட கோபமும் மூண்டது.

"யாரையா நீ?"

"டேய், மணி” ஆழ்ந்து தாழ்ந்த குரல், மிருதங்கத்தில் குமுக்காரம் கொடுத்தாற்போல். குருக்களுக்குப் பயத்தில் வயிறு சுருட்டிற்று.

"தெரியல்லியே !" முனகினார்.

“நன்னா யோசனை செய்து பார்! பின்னுக்குப் போ வெளியில் வா இருட்டில் தடவிண்டிருந்தால் என்ன தெரியும்?”

திடீரென நெஞ்சில் ஒரு பரந்த விடிவு. குருக்களுக்கு, அந்த வெளிச்சத்தில் கண்கள் அகல விரிந்தன

“யாரு, தர்மராஜனா? என்னப்பா தருமு, நிமிஷத்தில் கதி கலக்க அடிச்சுட்டியே !” ஆமாம், தருமுவே தான். குருக்கள் ஆசையாக அவரை அணைத்துக் கொண்டார். "அடே, எத்தனை வருஷங்களடா !”

"இன்னமும் சந்தேகம்தானா?”

"இல்லேடா தருமு, இந்தச் சிவப்பு என்னை உஷார்ப் படுத்தியேயிருக்கணும். நம் உறவில், ஏன், ஜாதியிலே இந்தக் கலர் ஏது? நீயே ஒரு அலாதிப் பிறவி. வா வா, வெளியில் சற்று உட்காருவோம். நீ இப்போ எங்கே இருக்கே? எப்போ வந்தே? ஆத்துக்கு அவசியம் வரணும்டா. அவ ரொம்ப சந்தோஷப் படுவாள். ராஜா மாதிரியிருக்கேடா !

“இப்படித்தான்டா தினம் மாரடிக்கறேன். கால் ரூபா பாக்கறது கடினமாயிருக்கு. என் தரித்திரம்தான்