பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா.

95

. அவன் ஒரு கணம் மெளனம் சாதித்துவிட்டு, 'சரி, போயிட்டுப் போவுது போற வழி, வர வழி எங்கேனும் பிள்ளையார் உண்டியலில் கால் ரூபா போட்டுட வேண் டியதுதான். ஒரு ரூபாயே போட்டு விடுவோம்.” சேட், நான் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். நீங்கள் மனசுக்கு ஏத்துக்க முடியாட்டி, என் அதிர்ஷ் டத்தை வேறே எங்கானும் தேடணும்னு கடவுள் சித்தம்னா-’’ 'தரம்ஜி, பரவாயில்ல. நான் சொன்னதை மறந்: துடுங்க..' சேட் அறையில் ‘ட’ வாகில் இரண்டு கட்டில்கள் ஒட் டிப் போட்டிருந்தன. ஒன்று சேட்டினுடையது. அடியில் போய் நாய் படுத்து விட்டது. இரண்டு கட்டில்களுக்குமிடையே ஒரு உப்பாயில் மருந்துக் கடையே இருந்தது. விதவிதமான கலர் சைஸ் சீசாக்களில் மாத்திரைகள், கேப்ஸ்யூல்ஸ், இன்ஜெக்ஷன் டியூப்ஸ், டானிக்குகள், பெரிய சைஸ் ஹார்விக்ஸ், பெரிய சைஸ் க்ளுகோஸ், பார்லே, மொனாக்கோ, ஒரு கண்ணாடி ஜாடியுள் ரொட்டித் துண்டு, ஃபஸ்ட் எயிட் பாக்ஸ் 'தரம்ஜி, இந்தக் கட்டிலில் நீங்கள் படுங்கள்.' 'ஸ்ேட், எக்ஸ்க்யூஸ் மீ. எனக்கு ஓபன் ஏர்தான் பழக்கம். வராந்தாவில் படுக்கறேன்.” 'ஒ. கே. குட்நைட்." பாதி ராத்திரி விழிப்பு வந்து விட்டது. எண்ணெய் போடாத கீல் போல் க்றீச்-க்றிச் உள்ளிருந்து ஒரே சீரில் வந்து கொண்டிருந்தது. ஹரே ராம் ஹரே ராம்!” பதறி ஓடிவந்து விளக்கைப் போட்டார். ஸேட், மடி