பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

கல் சிரிக்கிறது

.

சேட், யாருமில்லே, தனியா மாட்டிக்கிட்டால் என்ன செய்வீங்க?"

'இது மாதிரி நடந்ததில்லே. இதனால்தான் இங்கே வந்தவங்க தங்கறதுமில்லே. நேத்து அட்டாக் மோசம். டாக்டர் போன் செய்த உடனே வருவார். அவர் குடும்ப சினேகிதர். நேத்தி லக் பெக்கூலியர்.' 'இருந்தாலும் நீங்கள் இப்படித் தனியா யிருக்கக் கூடாது. என்ன வேனுமானாலும் நேரும்.' என்ன செய்யலாம்? அப்புறம் இட் இஸ் கடவுள் சித்தம்.” 'டாக்டரைக்குடும்ப சினேகிதர் என்றிங்க. குடும்பம்?" 'கடந்த முப்பத்தைந்து வருடமா குடும்பம் கிடை யாது.” - சேட் புன்னகை புரிந்தான். அது எனக்குத் தெரிஞ்ச இங்கிலீஷ். வொய்ப் முதல் டெலிவரியிலேயே போயிட்டுது. குழந்தையும் கூடவே போயிட்டுது. நான் அப்புறம் ஷாதி செய்துக்கல்லே. அவங்களுக்கு ஒரு ரூல், நமக்கு ஒரு ரூலா? நான் கொஞ்சம் தனித் தரம், தரம்ஜி.” 'கஷ்டமாச்சே!” 'கஷ்டம், இஷ்டம் எல்லாம் மனஸ் , கட்டுப்பாடு, வைராக்கியம் அப்பிடி இப்பிடி, அனேகமா முடிஞ்ச போச்சு. இனிமேல் என்ன? கண்ணைச் சிமிட்டினான். "அப்போ ஊரைப் பார்க்கப் போய்ச் சேரலாமே ! இங்கே என்ன தலையெழுத்து? உங்களுக்கு இன்னும் சம் பாதிச்சு என்ன ஆவணும், சேட் ஒண்டியாளுக்கு உங்களி டம் போதுமானது இருக்கும்னு நினைக்கிறேன்.” 'ஊரிலே என்ன இருக்குது, தரம்ஜி? இங்கே வந்து நாற்பது வருடத்துக்கு மேலே ஆவுது, இனிமேல் இதுதான் நம்ம ஊர். பொழுது போவணுமே. அதுக்குத்தான்