பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

கல் சிரிக்கிறது


z & ?? சேட், நீங்க ஸென்டிமெண்டல் ஆயிட்டீங்க. " "ه ع التي "நெவர் மைண்ட். சேட்டுக்குக் கோபம், டாக்டர் தன்னைச் சீண்டுவது. வெரி குட்!" டாக்டர் எழுந்தார். "மிஸ்டர் தரம், தேங்க்யூ. அவரை நல்லா பார்த்துக்கோங்க. ஹி இஸ் எ ஹார்ட் பேஷண்ட். அவர் எதிரேயே சொல்றேன்னு பார்க்கறிங்களா? அவருக்குத் தெரியும். சமாளிச்சுக்கற மனுஷன்: தைரியசாலி.” அவர்கள் இருவரும் சிரித்தார்கள். கோவில் மண்டபத்தில் உட்கார்ந்து தர்மராஜன் குங்கும ப்ரஸ்ாதம் வழங்கிக் கொண்டிருந்தார். சனிக் கிழமையிலும் இது ஒரு மந்த நாள் ஸ்வாமி தரிசனத் துக்குக்கூட மாஸ்க் கடைசி உண்டா? இன்றுதான் அந்த நாள். வேலைக்குப்போய்ப் பதினைஞ்சு நாளாவது. தீர்மான மில்லாமல் ஒட்டிக் கொண்டே போனால், வந்த காரியம் நடக்கவே போவதில்லை, அது என்ன காரியம்? சேட்டிடம் வேலைக்குப்போகும் போதே இந்தத் திட்டத்துடன் தான் வந்தேனா? வேலைக் குப் போனதுக்கு நிறுத்தி வெச்சு காரணம் கேட்டால், கண்டிப்பாகச் சொல்லத் தெரியாது. என்னவோ பொழுது போக்காக வந்தேன். என்னவோ கூடவே யிருந்து ஆளை நோட்டம் பார்க்க வந்தேன். இந்த ஆள்கிட்ட வேலையை வாங்கிடறது ஒரு சவாலாக நெனைச்சு வந்தேன். ஆனால், இந்தத் திட்டத்தின் கரு-மஞ்சள் கருவோ, வெள்ளைக் கருவோ - இங்கு வரும்போதே மண்டையுள், மண்டையின் பின்னால் ஒளிஞ்சிட்டிருந்திருக்கணும். இல்லாட்டா, கோமதியைச் சந்திக்கும் முன்னாலேயே, இவனுடைய விளம்பரத்தை நான் பார்ப்பானேன்? நாங்