பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

கல் சிரிக்கிறது

. யாக அதன் மேல் விளம்பிக் கொண்டே, அது போன வழி போனதும், கல்லின் கறுப்போடு கறுப்பாய், இத்தனை வருட காலமாய் வடிந்து வறண்டு போன எண்ணெய்ப் பிசுக்கோடு பிசுக்காய், அதுவே ஒரு பிசுக்குருண்டை போல o 3. பை முடிச்சு இருக்கும் ஜேபி தீயத் தொடங்கி விட்டது. ஆ அகப்பட்டுக் கொண்டாரய்யா! பொத்தானை அழுத்தியதும் ஒரு சிறிய கல் கதவு விட்டுக் கொண்டாற் போல்- விட்டுக் கொள்ளவில்லைதொங்கிற்று. பிரதிஷ்டையோடேயே, சிற்பியின் வேலைத் திறன். உள்ளே கை விட்டுத் துழாவியதும், அன்று பெரியப்பா தனக்குக் காண்பித்தபடியே, ஒலைச் சுவடி பத்திரமாக இருந்தது. இன்னும் ஏதேதோ புத்தகங்கள். அவைகளை வைக்க வீட்டில் பத்திரம் போதாது என்று பெரியப்பாவுக்குத் தோன்றியிருக்க வேண்டும்-சோதித்துப் பார்க்க இப்போ நேரமில்லை-நகைப் பையை உள்ளே தள்ளிக் கதவை மூடின பிறகுதான் தன் முகம் ஜலகண்ட மாகக் கொட்டியிருப்பது உணர முடிந்தது. நோ டைம் ஃபார் எனிதிங். இ. 红亭 虚 ஒரு முறை குனிந்து அம்பாள் முகத்தைப் பார்த்தார். என்ன சொல்கிறாள்? சிரிக்கிறாள். சிந்திக்க நேமில்லை. உள் வெலவெலப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது. காரியம் முடிந்து விட்டதும் முறுக்குத் தளர்ந்து விட்டது. எல்லாம் மனோ பலத்தில்தான் நடக்கிறது. வீடு போய்ச் சேரனும், கதவில் சாவியைப் போட்டுத் திருப்பிக் கொண்டிருக் கையிலேயே, பின்னாலிருந்து 'பிராணாம் மஹ்ராஜ் !’