பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*gi)r了 字。 ア庁。 ፳ 0ፖ களைச் சந்தேகப்பட? ஒரு சமயமேனும் அசட்டையாக பாதுகாப்பாய்க் கதவில் சாவி தொங்கிப் பார்த்த ஞாபகம் அவருக்கு இல்லை. அப்புறம் நான்தான், ஆயிரம் பழகி விட்டாலும், ப்ரதர் மாதிரி ஆகிவிட்டாலும் நானும் அவனிடம் வேலை பார்க்கும் ஆட்களில் ஒருவன் தானே! நேரிடையா நாக்கில் பல் பட்டுக் கேட்கக் கொஞ்சம் அஞ்சலாம். ஆனால் ஒரு நாள் கேட்டேதான் ஆக வேண்டும். பீரோவிலிருந்து பிராந்தி எடுக்கச் சாவியைக் கொடுத்தது எப்போ ஸ்பஷ்டமாக ஞாபகம் வருகிறதோ அப்போ ஆனால் என்னத்தை நிரூபிக்க முடியும்? அந்தக் கசப்பே, அந்தச் சந்தேகம் காரணமாக, நான் வேஷம் போட்டு நின் இடனும். அதுவரை? நடக்கிறதைப் பார்த்துண்டு ஒண்னும் செய்ய முடியாமல் சகிச்சுண்டு காத்திருக்கனும், அந்த டென்ஷனைத் தாங்க நமக்குத் தெம்பு இருக்கா? இன்னிக்கே நாடி ஆட்டம் கொடுத்துப் போச்சு. இல்லை, நானாவே, சேட், நான் என்னவோ நினைச்சேன். எனக்கும் உடம்பு தள்ளல்லே. செலவு வாங்கிக்கறேன்...'னு இப்பவே நோட்டிஸ் கொடுத்தால், அப்பவும் நகை களவு போனதை எப்போ கண்டு பிடிக்கி றானோ? முதல் சந்தேகம் என் மேல்தான். வேட்டை நாய்களை அவிழ்த்து விடுமுன்னர், நான் ஊரை விட்டே போயிடுவேன். இப்பவே ஜூலி மண்டைக்குள் என்ன ஓடிண்டிருக்குன்னு எனக்கு அஸ்தியிலே ஜூரம்தான். அதன் மோனமும் தோரணையும், உலகத்தையே ஒரு அலட்சியமாக்கும் பாவனையும்-ஒரு யோகீஸ்வரன் அத னுள் புகுந்துண்ட மாதிரியிருக்கு. எதிலும் மாட்டிக் கொள்ளாமல் வாழ்க்கையில் மிதந்து செல்ல வேண்டுமென்று நான் பட்ட ஆசை யென்ன? இப்போ நடக்கிறதென்ன? வகையாக ஆழந் தெரியாமல் மாட்டிக் கொண்டு விட்டேன்.