பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

கல் சிரிக்கிறது


மாட்டிக் கொண்டேனோ? இப்பவும் மிஞ்சிப் போயிட வில்லை. இன்னிக்கு இனிமேல் நாளைக்கு விஷயங்களை யதார்த்ததளத்துக்குக் கொண்டு வந்து விட்டால்?கோமதி மேல் அனுதாபம் என்னால் தாங்க முடியாதபடி இருந்தால் முடிந்த சகாயம்-அத்தோடு சரி. அவரவர் கஷ்டம்,விதி அவரவர்களுடையது. மாற்றியமைக்க நான் யார்? கடவுளா? இவ்வளவு தூரத்துக்கு உளையில் அழுந்தின பிறகுதான், இப்படித்தான் இந்தப் பாடத்தை நான் தெரிஞ்சுக்கணும்னு இருக்காப் போலிருக்கு. இந்த யோசனை யெல்லாம் ஏன் முன்னால் தோணவில்லை? கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் இல்லை. முழுக்கக் கெடல்லை. நாளை ராத்திரி பழைய நிலைக்குத் திருப்பி வெச்சுடுவோம். அதுதான் சரி. இந்த ஸ்டண்டுக்கெல்லாம் நாம் லாயக்கில்லை. கொஞ்சத்துக்குக் கொஞ்சம் மனதை அமைதிப் படுத் திக்கொண்டு கண் மூடிக் கண் திறப்பதற்குள் நன்றாய் விடிந்து இருந்தது. சேட் இன்னும் எழுந்திருக்கவில்லை. உடம்பை முறித்துப் போட்டாற் போல் வலித்தது. இன் னிக்கு ஏதாவது ஸிம்பிளாகப் பண்ணிக்கணும். அதைவிட மேல், சேட்டை இன் னிக்கு ஹோட்டலிலிருந்துவரவழைத் துக் கொள்ளச் சொல்ல வேண்டியதுதான். அவனும்தான் பிரியாணிக்கு அலைவானே? இன்னிக்கு நமக்கு ஒய்வு நாள் கீழேயிறங்கி வாசற்கதவைத் திறந்துவிட்டார். சாணி தெளிக்க வேலைக்காரி வர மாட்டாள். அவர்களெல்லாம் இப்போ ரொம்ப மேட்டிமை ஆகி விட்டார்கள். பற்றுத் தேய்க்க வருவதே ஒன்பது மணிக்குத்தான். வாசலில் பால் புட்டி இருந்தது. இது பழக்கம்தான். இந்த நேரத் துக்கு அது லவுட்டீஸ் ஆகாமல் இருந்ததுதான் ஆச்சரி ti jíst . பல் விளக்கிவிட்டு, வடிகட்டியில் டிகாக்ஷன் இறக்கிக் கொண்டிருக்கையில் ஒரு ஊளை-முதன் முதலாக அதைக் கேட்கையில்-குடலைக் கலக்கிற்று. என்னவென்று ஓடி வந்தார். ஜூலியின் மூக்கு நுனி கூரையை முட்டிக்