பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

கல் சிரிக்கிறது


'இல்லே டாக்டர், நேற்று நிலைமை நல்லாயி யிருந்தது.” 4. 'ஹல்லோ, வாட் இஸ் திஸ்?’ டாக்டர் ஒரு பாட் டிலை உயரத் தூக்கி ஆட்டிக் கொண்டிருந்தார். 'எனக்குத் தெரியாதே !' 'துரக்க ம. த்திரை.” "அதுவும் எனக்குத் தெரியாது அவர் மருந்து வழிக்கு நான் போவதில்லை. அவரே தான் சாப்பிடற வழக்கம்.' இங்கே இருக்கிற ஐட்டம்ஸ்ல ரெண்டு துரக்க மாத்திரை ஆனால் இது கார்டினால்னா !” அப்படின்னா?” டாக்டர் பதில் சொல்லவில்லை. அலைந்து கொண்டி ருக்கும் பார்வை தற்செயலாக ஜூலி மேல் தங்கிற்று. கொஞ்ச நேரம் அதையே மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். 'ஹல்லோ ஜூலி, கமான், கமான்’’. - கையை நீட்டி னார். ஜூலி வரவில்லை. அது இட்ட ஊளையில் அதன் பலமெல்லாம் வடிந்து விட்டாற்போல் சொரத்தாயில்லை. வாயில் கொட்டாவி வழிந்தது. படுத்துக் கிடந்தது. அதன் அருகே அதன் தட்டில் நேற்றையச் சோறு கொஞ் சம் சிதறிக் கிடந்தது. டாக்டர் பெருமூச்செறிந்தார். மனதை ஏதோ திடம் பண்ணிக் கொண்டு போன் பண்ணினார். டயல் பண்ணிக் கொண்டே அவர் கண்கள் தர்மராஜன் கண்களைச் சந்தித்தன. 'இது ஒரு மோசமான உலகம், மிஸ்டர் தர்மராஜன். அவர் ஒரு நல்ல மனுஷன். ஒரு பெரிய மனுஷன். நான் மிஸ்டர் மனக்சந்தைச் சொல்றேன்.'