பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

கல் சிரிக்கிறது


பண்ணல்லே. சேட் கண்டிஷனுக்கு அது பவர் ஜாஸ்தி. ஒத்துக்காதாம். "அத்தோடு இருந்தாலும் பரவாயில்லே . நாய் சாப் பாட்டில் சில்மிஷம் நடந்திருக்குது. எதுக்காக? இந்தக் காரியத்தைச் செய்தவனுக்கு எண்ணம் சரியாயில்லே, ஒப் புக் கொள் நீங்களா? "சேஃப் கதவு, கைப்பிடி - அது மேலே ரேகை கூட இல்லை. தினம் புழங்கற சேட்டினுடைய கை ரேகை கூட காணோம். அப்படி எப்படியிருக்க முடியும்? இருக்கலாம். மெனக்கெட்டுத் துடைச்சிருக்குது. 'சரி, சேஃப்பைத் திறந்து பார்த்தோம். ஒரு பை காணோம். என்ன முழிக்கிறீங்க? பையைக் காணோம்னா கணக்குப் புத்தகங்கள் கூடவா காணாமல் போச்சு? முலு, முலுன்னு கட்டெறும்பு மாதிரி அவங்க பாஷையில்தான் இருக்குது. அவங்க ஜாதிக் கணக்கன் ஒருத்தனை வர வழைச்சு செக் பண்ணினோம். கோமதி அம்மாள் பேருக்கு உரிய பை காணோம். நாங்கள் கோமதி அம். மாளைக் கண்டு பேசியாச்சு.” மை காட் அறை தட்டாமாலை சுற்றிற்று. 'மிஸ்டர் தர்மராஜன், இதில் பிரமாதச் சிக்கல் இல்லை. இது ஒரு திறந்து மூடற கேஸ்தான். முன்ன்ா லேயே சொன்ன மாதிரி சந்தேகம் உங்கள் ஒண்டி மேல் தான். நான் உறுதிதான் பண்ணிக்கிறேன். உங்களுடைய துரதிர்ஷ்டம். ஆள் நாள் பார்த்த மாதிரி அன்னிக்குப் பார்த்துச் செத்தானே, அதான். அவர் மட்டும் சாதார ணமாய் மறுநாள் முழிச்சு எழுந்திருந்தால் பை காணாமல் போனது என்னிக்கு அவர் கவனத்துக்கு வருதோ அன்னிக்குத்தானே! உங்களுக்கு அதற்கு வேண்டிய நேரம் இருந்திருக்கும். ஆனால் இந்த யோசனைக் கெல்லாம் இப்போ இடமில்லை, நான் டிராமா நடத்தப் போவ தில்லை. நீங்கள் எதாவது சொல்வதற்கு இருக்கா?” தர்மராஜன் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தார்.