பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லா.ச.ரா.

9

“அப்பிடின்னா எங்கே காட்டு!”

“அவசியம் வரப்போ, நீ வீம்பு பிடிச்சால், காட்ற இடத்தில், காட்ட வேண்டிய சமயத்தில் காட்டுவேன். ஆனால் ஒண்ணு, ருஜு உனக்கு அவசியம்தான்ன, தஸ்தாவேஜு ப்ரகாரம், என் முழுப் பங்கு பாதிக் கட்டளையும் பிடுங்கிண்டுடுவேன். அதனாலே எதை யேனும் ஆரம்பிச்சுட்டு முடிக்க முடியாமல் திண்டாடாதே. இப்போ கேக்கறது வாரத்தில்: ஒரு நாள். நீயா இஷ்டப் பட்டுக் கொடுக்கற ஒரு நாள் வெள்ளி, விசேஷ தினங்கள் எல்லாம் நீயே வெச்சுக்கோ. என் கிழமையில் எனக்கு வரும் அபிஷேகம், மண்டகப்படி எல்லாம் உனக்கே திருப்பிடறேன். ஆனால் என் இஷ்டத்தில் விட்டுக் கொடுக்கறேன். என்ன சொல்றே?’’

மணி சன்னிதானத்தை நோக்கி முஷ்டியை ஆட்டினார்.

“அடியே, இப்படி வெடி வைக்கத்தான், கொடுக்கறாப்போல “ஜூல்” காட்டினாயா?”

“அவளை நிந்தித்தால் என்ன கிடைக்கும்? உன் எண்ணத்தைத் திருத்திக்கோ, நானும் எங்கெங்கோ சுத்தியாச்சு. இதுதான் என் ப்ரமிப்பு. 'அடுத்துக் கெடு...' இது தான் ஆத்திச் சூடியா யிருக்கு. ஆனால் அவள் தன் அகண்ட கருணையில் எல்லாத்தையும் எப்படித் தாங் கிண்டு இருக்கா?”

“போடா ஆஷாடபூதி!'

“நீ சொல்வதிலும் உண்மை யிருக்கலாம். மனசில் இருக்கிறதை வெளியில் விட்டுச் சொல்றதிலேயே உண்மையின் அந்த உரு கொஞ்சம் சிதைஞ்சு போறது. நான் என்ன அவதார புருஷனா ஒரு அப்பு அழுக்கு இல்லாமல் இருக்க? அப்படி என் குற்றங்களையும் அவள் தான் மன்னிக்கனும்.’’

"நான் பிள்ளை குட்டிக்காரன்டா!” மணி போட்ட