பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கல் சிரிக்கிறது

கத்தலில் தெருவில் படுத்திருந்த நாய் தலை தூக்கித் திரும்பிப் பார்த்து விட்டுப் படுத்தது.


'ஸ்டுப்பிட்!' அந்தச் சீறலில் மணி 'கப்சிப்’ ஆனார். கர்ப்பக் கிருஹத்தில் சுடர் அணைந்து திரி பொசுங்கிய நாற்றம் இடம் பூராவும் பரவிற்று. அவர் எழுந்து நின்று விட்டார். நல்ல உயரம். புலு புலுவென்று உறைபோல் முழங்கால்வரை துல்லியமான மஸ்லின் ஜிப்பா. தரையில் புரளப் புரள மஸ்லின் வேட்டி. தலை நரை, ஒரு கறுப்புக் கூட இல்லாமல் அடர்ந்து, வெண்பட்டென மின்னிற்று. வெளுத்த நெற்றியில் குங்குமம் விழியாய்க் கனைறது. கன்னங்கள் ஒரு மாசு மறு, சுருக்கம் இன்றி வழவழவென-இன்றுதான் சுவரமோ? அவர் நின்ற நிலையில், அவரைப் பார்க்க ஏதோ நீர் வீழ்ச்சி போல்என்னவோ மனுஷன் பயமாயிருந்தான்.


“எந்த நாள் கொடுக்கறே?”

“சனி!” என்று மணி முனகினார்.

“என்னைச் சனின்னு திட்டறயா? சனிக் கிழமை என்கிறயா?”

“சனிக் கிழமை.”

“சரி, சம்மதம். இதனால் உனக்கு ஒண்ணும் நஷ்டம் இருக்காது கவலைப்படாதே."


“என்ன நஷ்டமில்லை?” மணிக்கு மறுபடியும் ஸ்ருதி ஏறிற்று. “முன்பின் நமோது இல்லாமல் புசுக்குனு முளைச்சு என்னவோ என்னை மிரட்டி வாரத்தில் ஒரு நாள் பிடுங்கிண்டுட்டியே!”

“என்னிக்கேனும் ஒரு நாள், பங்கை நீ கொடுத்துத் தானே ஆகணும்? அதை 'அபேஸ்' பண்ணிட முடியுமா? நான் கேட்கிற என் பங்குக்குக் கூட என்னிஷ்ட பாத்யம் கிடையாதா? சந்ததி சமாச்சாரமாச்சே, நானில்லாட்டா என் வழியில் ஒரு துருத்தியான் வாரிசு கொண்டாடிண்டு