பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லா.ச.ரா.

11

வருவானே! அப்போ உன் பிள்ளைகள் அவனுக்கு ஜவாப் சொல்லியாகனுமே!”

“சரி சரி, உன் ப்ரசங்கத்தை நிறுத்திக்கலாம்!”

அவர் தோளைக் குலுக்கிக் கொண்டார். ஆமாம், பேச என்ன இருக்கிறது?

சற்று நேரம் அங்கு மெளனம் நிலவிற்று.

படுத்திருந்த நாய் வெடுக்கென எழுந்து ஒடி இருளில் மறைந்தது. தெரு முழு வெறிச்சாகி விட்டது.

லாந்தர் கம்பம் கம்பமாக நின்றது. இருந்தாற் போலிருந்து மணி ஆரம்பித்தார். “ஆமா' உன்னை ஒண்ணு கேக்கணும்.”

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவர் தலை நிமிர்ந்தார்.

"இப்படியேனும் என் வயத்தில் அடிச்சு வாரத்தில் ஒரு கட்டை நாளையேனும் வீம்புக்குப் பிடுங்கிண்டு என்ன பலனைக் காணப் போறே? உண்மையில் இது உனக்கு உதவப் போறதா? ஏதேனும் பதில் உண்டா? இல்லே. வாயை 'ஆவ் ஆவ்’னு ஓணான் மாதிரி திறந்து திறந்து மூடறதோடு சரிதானா?”

மணி ஏளனம் செய்வது போலவே பதில் சொல்ல யோசித்துக் கடைசியில் சொல்லாமலே 'கம்'மாகி விட்டார்.

பார்த்தையா, வாயடைச்சுப் போச்சு. எனக்கு அப்பவே தெரியும். 'நானும் வாழ மாட்டேன். பிறத்தியானையும் வாழ விட மாட்டேன்'. -அதானே? இத்தனை நாள் எங்கேயோ ஊர் சுத்திட்டுத் திரும்பி வந்ததுக்கு அடையாளம் கல்லை விட்டெறிஞ்சு குட்டையைக் கலக்கியாகணும். அதானே? சரி, வர்றேன். இன்னும் இங்கே இருந்தால் ஆத்திரம்தான் பொங்கும். ஏற்-