பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கல் சிரிக்கிறது

உடம்பில் ஆயிரம் கோளாறு-சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, மூத்திரக்கட்டு, மூலம், சின்ன வயதில் இளம் பிள்ளை வாதத்தில் வலது கால் திரும்பி விட்டது. இதே ரீதியில் கத்திமேல் நடந்தே மனிதன் முழு ஆயுசும் இருந் திருக்கிறார் என்பதைச் சிந்திக்கையில், மனித சாதனைக்கு அத்தாக்ஷுயாக விளங்கியிருக்கிறார். சாவுக் கடுதாசு எட்டு தபால் முத்திரைகளைத் தாங்கிக் கொண்டு என்னைத்தேடி அடைவதற்குள் முதல் மாஸிகம் ஆகியிருக்கும். ஆளே போய்விட்ட பின் இருப்பவரைக் கட்டியழுவதும் இருப்பவர் நடத்துவதும் நாடகம்தானே! அதுவும் மணி... மூணு மாசத்துக்குப் பின் பெரியம்மாவும் காலமாகி விட்டாள். கணக்கே பைசல். நான் போகாததைச் சரியென்று சாதிக்கவில்லை. பெரியப்பா இருந்தாலே அப்படித் தான் சொல்லியிருப்பார். 'என்னடா தருமு, நீ எதை வந்து தடுக்கப்போறே?'ன்னு. மனிதன் அப்படிப்பட்டவர். உடம்பில் வாழவில்லை. திட சித்தத்துள் வாழ்ந்தார். வாழ்ந்து காட்டினார்.

ஆகாரத்தில் உட்கார்ந்தால் தப்பு, நின்றால் அபராதம், திரும்பினால் தண்டனை வயிற்றுக்கு நிரம்பவும், நாக்குக்கு ருசி பார்க்கவும் மறந்தே போயிருக்கும் நாக்குக்குப் பேச்சு ஒண்ணுதான் மிச்சம். அதையும் அடக்கி விட்டார். லேசாய் மணிக் கணக்கில் கிழக்கைப் பார்த்துக் கொண்டு அசைவற்று அப்படி வேறு யாரால் உட்கார்ந்திருக்க முடியும்? அப்படியெல்லாம் யிருக்கணும் என்று எனக்கும் ஆசைதான். ஆனால் எல்லாருக்கும் முடியற காரியமா?

அப்போது என்னத்தை நினைத்துக் கொண்டிருப்பார்? தன்னையே தின்று கொண்டிருந்தாரா?

மிச்சப் போதுக்கு எழுதிக் கொண்டிருப்பார் தேவநாகரி, நோட்புக் நோட்புக்காய்க் குவித்துக் கொண்டிருந்தார் ஒன்றிரண்டாவது ஞாபகார்த்தத்துக்கு... மணியிடம்?...ஊஹூம். ஆத்திரம் பிடிச்சவன், போகி-