பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லா.ச.ரா

15

கொளுத்தியிருப்பான். பெரியப்பா என் மேல் கனிவாயிருந்தது அவனுக்கு எப்பவுமே ஆகாது. தாய் தகப்பனில்லாதவன். தருமச் சோறு தர்மராஜன். எதிர்த்துப் பேச எனக்கு வாயேது?

கோவில் பூஜை தவிர, வீட்டில் சின்ன மர விமானத்தில் ராஜ ராஜேஸ்வரி ப்ரதிஷ்டை, நவராத்ரி தோறும் அமர்க்களப்படும். எப்போது பார்த்தாலும் அவள் மேல் ஏன் இந்த வேட்கை? உனக்காச்சு எனக்காச்சு பலப் பரீக்ஷையா? இல்லை, உன்னை விட்டால் வேறேது கதியென்று சரணாகதியா?

கடலில் துள்ளி யெழுந்து அதிலேயே விழும் மீன் போல், அந்த அகண்ட மோனத்தில் அவ்வப்போது எழும் பேச்சுக்கள் ப்ரஸாதம் போல் காத்திருந்தவர்கள் அதிர்ஷ்டம்.

மோனத்தில் சோதனை நடத்த எவ்வளவோ இருக்கு. வெறும் பேச்சை அடக்குவது மட்டும் அல்ல. இன்னும் என்னவோ இருக்கு. அந்த நிலையில் அந்த உலகமே தனி

ஆனால் பெரியப்பா ஏதோ ஒரு கட்டத்தில்தான் இருந்திருக்கிறார். சந்தேகமேயில்லை. அத்தனை வியாதிகள் படுத்துகையில் ஏதோ ஒன்றின் காரணியாக ரத்து ஆகாமல், உசிரை உடம்போடு பிடித்து வைத்துக் கொண்டிருந்ததே ஒரு அமானுஷ்ய வித்தையல்லவா?

ஒரு நள்ளிரவு. பக்கத்தில் துரங்கிக் கொண்டிருப்பவனைத் தட்டி எழுப்பி, 'தருமு, யாருக்காகவும் யாரும் காத்திருப்பதில் அர்த்தமில்லை. உண்மையில் யாருக்காகவும் யாரும் காத்திருக்கவில்லை. ஆகையால்' யாருக்காகவும் யாரும் காத்திருக்க வேண்டாம்'

காத்திருந்தேன்.

கை விரித்தார். “நீ வந்த வேலையைப் பார்.”

“என்... வேலை... என்ன பெரியப்பா?”