பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கல் சிரிக்கிறது

புதுக்குழல் இப்படிப் பேசுமா? உனக்காக நான், எனக்காக நீ.

ஸத்ஸ்கரி த்ருதன் கதக நிதமாகரி.

பதஸா கபதிஸா ரிகபதஸா ஸரிகபதஸா.

இதென்ன ராகம்? மீண்டும் இதே ஸ்வர ஸ்தானங்களை எனக்கு வாசிக்க வருமோ?

மறுபடியும் ஒரு தம்ளர் தண்ணீர் முழுங்கு.

ஜிப்பாவைக் கழற்றி எறிந்தார்.

தோல் சுருக்கத்தால் இறுக்கத்தில், விலா எலும்புகள் எண்ணிக்கொள் என்று பிதுங்க ஆரம்பித்து விட்டன.

கட்டிலில் படுக்கையை விரித்துப் படுத்து விட்டால் தூக்கம் வந்து விடுகிறதா? என்ன வேணுமானாலும் ஆகட்டும். இன்று மாத்திரை போட்டுக் கொள்ளக்கூடாது. தூக்க மாத்திரைப் பழக்கத்திலிருந்து என்னால் முற்றிலும் விடுபட முடியுமோ? உத்யோகம் பண்ணுகிற நாளில் ஒரு டாக்டர் சினேகிதன் இந்தப் புண்யத்தைக் கட்டிக் கொண்டான். கெடுதல் இல்லை, தர்மராஜன் பின் கோளாறுகள் கிடையாது. அவன் சொல்லிட்டுப் போயிட்டான். இப்டோ அது இல்லாமல் இருக்க முடியலே. மாத்திரையை விழுங்கிவிட்டு மூர்ச்சையில் ஆழ்வது, அதுவும் ஒரு தூக்கமா? இயற்கையான தூக்கத்தில் குளித்தெழுந்த ஒரு புத்தொளி இதில் எங்கே இருக்கு? ஒரு தன்மானம் கெட்ட பிழைப்புத்தான் !

வேலையில்லாமல் இருந்தால் பொழுது போகாமல் இருப்பது மட்டுமல்ல, உடம்பே வசத்தில் இல்லை. வயிற்றில் ஏதோ ஒரு இரைச்சல். உடம்பை முறித்துப் போட்ட மாதிரி ஒரு வலி. என்னவோ நினைத்தேன். உழைப்பின் பிடுங்கல் இல்லாமல் இனி ஹாய்யா படுத்துண்டேயிருக்க வேண்டியதுதான். ஆனால் நாம் ஒன்று நினைக்க...