பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லா.ச.ரா.

19



தூக்கம் என்பதே உடலின் ஒய்வுக்கா? மனதின் மறதிக்கா? எதை மறப்பேன், எதிலிருந்து ஒய்வு பெறுவேன்?

இன்று பேப்பரை வாங்கிச் சுருட்டி, தொடையில் அடித்துக் கொண்டு வந்தேனேயொழிய இன்னும் பார்க்கலையே அரசியலில் அனைத்தும் உள்ள ஊழல் புதுமையுமில்லை. படிக்கவும் பிடிக்கல்லே. விளம்பரங்கள் பார்ப்போமா? - ஆ, இதோ, இது என்ன?

தேவை - வீட்டோடு தங்கியிருக்கும் சமையல்காரர். ஆணோ, பெண்ணோ அவசரமாகத் தேவை. சைவபதார்த்தங்கள், ருசியாகத் தித்திப்பு, கார டிபன், சாப்பாடு செய்யத் தெரிந்திருக்க வேண்டும். ஸிந்தி சமையல் என்று அவசியமில்லை. தமிழர் சமையல் தெரிந்திருந்தால் கூடப்போதும். அவசரமாகத் தொடர்பு:

மானக்சந்த் ஸ்ர்க்கார்

37, பெல்ஸ் ரோடு,

சேப்பாக்கம், சென்னை - 5:

பயலுக்கு நாக்கு ரொம்ப செத்துப் போயிருக்கும் போலிருக்கே ! விளம்பரமும் வயிற்றுப் பசியை நினைவு படுத்தணுமா? பேப்பரைச் சுருட்டி மூலையில் அடித்தார். இன்று தூக்க மாத்திரையில்லாமல் முடியாதே என்று. போட்டுக் கொண்டு ஒரு தம்ளர் தண்ணி.

பாதிக் கண் செருகலில், கண்ணுள் ஒரு கை :

அபய ஹஸ்தம்.

நடன முத்திரை.

உள்ளங்கையில் மருதாணியில் சக்கரம் எழுதி அதன் நடுவே ஒரு முத்து அவர் முகத்தில் ஒளி வீசிற்று. படுக்கையில் புரண்டார். முயன்றும் இமைகளைத் திறக்க முடியவில்லை.