பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

கல் சிரிக்கிறது

ஏன்? - ஐயாவோடு சாவகாசமா நான் பேச ஒரு நாள் இடங் கொடுக்கணும்.”

அது போய் நாளாச்சு. நாடார் கேட்ட வரம் பலிக்க வாய்ப்பில்லை. மறந்தும் போச்சு. நானும், இவரும் பேச என்ன இருக்கு?

பல் விளக்கி முடிவதற்குள் நறுமண ஆஹாதியில் ஜடராக்னி ஜ்வாலை கண்டுவிட்டது. வைராக்யமும் சேர்ந்து ஆஹூதி. அறியாமலா அந்த நாளிலேயே சொன்னார்கள் : பசி வந்திட...

புகைப்போக்கி வழியாக: “அம்மா அம்மா!”

கப்சிப். மறுபடியும், “யாரும் கீழே யில்லையா? யாராயிருந்தாலும் சரி, அம்மா !-”

அடுப்படியிலிருந்து யாரோ ஓடிப்போய், யாரோ அடுப்படிக்கு ஓடிவரும் சப்தம். கனத்த அடிகள். கீழேயிருந்து பக்தியுடன், பயத்துடன் “ஐயா ! அளைச்சீங்களா?”

“நாடார், தோசை கமாளிக்குது. நான் ராத்ரி சாப்பிடல்லே !”

“ஐயா வந்தேனுங்க, இதோ ஒரு நிமிஷம்.”

அறையுள் போய், கட்டிலில் உட்கார்ந்து கொண்டார். தீனி இதோ வருகிறதென்று தெரிந்ததும் உலைக்கு மூடி கழன்றாற்போல், பசி வாய் திறந்து கொண்டது.

மொட்டை மாடிவாசலில் நாடார் உதயமாகிறார் காலையின் இள வெயிலில் நாடாரின் கறுப்பு, எண்ணெய் பூசினாற் போல் பளபளக்கிறது. அவர் கையில் விபூதி மடல். பின்னால் ஆச்சி, துல்லியமான வெள்ளைத் துணி போட்டு மூடிய தட்டுடன்.

விபூதி மடலைக் கையில் கொடுத்துவிட்டு, ஆச்சி ஏனத்தை மேசை மீது வைத்துவிட்டு, இருவரும் எனக்கு