பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லா.ச.ரா

27

கண்ணாடி அறையுள் மானேஜர் உட்கார்ந்திருந்தாா.

மானேஜர் முகம் மலர்கிறார். எதிர் நாற்காலியைக்காட்டுகிறார்.

“ஸார், என்னுடைய முன்னாள் அதிகாரி.”

“ஆகவே?” பட்டனை அழுத்துகிறார். “பையா ஒரு ஃபான்டா கொண்டு வா!”

“இல்லை, வேண்டாம். காலையில் அதெல்லாம் நான் சாப்பிடுவதில்லை.”

"அப்படின்னா என்ன சாப்பிடுவீர்கள்? காபி, ஹார்லிக்ஸ்?"

“எதுவும் வேண்டாம், மன்னிச்சிடுங்க-”

“ஸார், நான் வேலை கத்துக்கிட்டதே இவர்கிட்ட தான் ஸார்-”

“நான் நம்பறேன். கோமதி கெட்டிக்காரப் பெண். நீங்கள் என்னவாயிருந்தீர்கள்?”

அது ஒரு தனியார் வங்கி-இந்தப் படாடோபம் அமர்க்களத்திடையில், அதன் பேரைச் சொல்லவே கூச்சமாயிருந்தது. கோமதி பைத்தியம்! என்னை ஏன் இப்படியெல்லாம் இழுத்து விடறாள்? உண்மையில் பெருங்கோபமாக வரவழைத்துப் பார்த்தாலும் அவள் மேல் பார்வை சாய்ந்தவுடனேயே பிசுபிசுத்துப் போய்விடறது.

பிய்த்துப் பிடுங்கிற்று. அவசரமாக எழுந்தார். “இனியும் உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஒரு தயவு, கோமதிக்கு நீங்கள் இரண்டு மணி நேர பர்மிஷன் தர முடியுமா? எனக்குக் கேட்க உரிமை கிடையாது. என்னவோ வாயில் வந்துவிட்டது. என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.”

மானேஜரின் மோனச் சிரிப்பில் புளிப்பு தெரிந்தது. எந்த அதிகாரிக்கு, சிப்பந்திக்கு லீவு-அதுவும் மூன்றாம் மனிதன் கேட்டால் - பிடிக்கும்?