பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கல் சிரிக்கிறது

அம்பது வயசிலேயே குதப்பு மாஸ்டர். பல் கட்டிக்க வசதியில்லை. என்ன சிரிக்கிறேள்?”

“ஒண்னுமில்லை, பன்னிரண்டு வருஷங்களுக்குப்பின் சந்திச்சி பல்லைப் பத்திப் பேசத்தானா குளிர் சாதன ஒட்டல், இரண்டு மணி அனுமதி-கோமதி ! உனக்கு எத்தனை குழந்தைகள்?”

"ஒரு பையன். ஒரு அபார்ஷன் -”

“திரும்பவும் வம்ச வழியா?”

அவள் கன்னத்தில் லேசாகச் செவ்வரி படர்ந்தது. தன்னைப் பார்த்துக் கொண்டாள். “ஏன், தெரியறதா என்ன, அதுக்குள்ளேயா?”

“இல்லை. ஆனால் சில சமயங்களில் சம்பந்தமேயில்லாமல் எனக்கு இப்படித் தோணும். சரியான்னு, கேட்டு, சரி பண்ணிப் பார்த்துக் கொள்வேன்.” சட்டென்று நாக்கை நீட்டினார்.

“தெரியறதா?”

“மச்சம்”.

“அதான் சரி. நான் நாலிடங்களில் திரிஞ்சதில் ஒருத்தன் என்னவோ சொல்லிட்டான். நாக்கு மச்சம் சொன்னதெல்லாம் பலிக்கும் என்று. இது மாதிரி விஷயங்களில் நம்பற மக்களுக்கு நம் நாட்டிலா குறைச்சல்? உடனே அவர்கள் கேள்விகளுக்குமா குறைச்சல்? நானும் பதிலுக்கு என்னத்தையோ உளறுவேன். இதனால் இதுவே ஒரு கெட்ட பழக்கமாப் போச்சு. நாக்கில் மச்சம். நாக்கை நீட்டிக் காட்டுவேன்.”

வாய் விட்டுச் சிரித்தாள்.

“ஸார் ! மது என்ன பண்றாள். எங்கே யிருக்கா? மாமி செளக்யமா?”

"யாருக்குத் தெரியும்?”