பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

கல் சிரிக்கிறது


நட, நட. வேக் வேக்கென்று நட, நட. காலத்தைக் கொல்ல முயலும் சித்ரவதையை விட வேறு வேண்டாம். காலத்துக்கல்ல. கொல்பவனுக்கு ஒரு புழு ஒன்பது புழு ஒன்பது தொண்ணுாறு தொள்ளாயிரம். எல்லையில்லை. அதில் நானும் ஒரு புழு, நெளிகிறேன், தவிக்கறேன். பசிக்க ஆரம்பிச்சாச்சு. நானா உபவாசம் இருப்பவன்? ஊ-ஹாம்-பெரியப்பா கால் தூசு பெறு வேனா? சந்தர்ப்பம் இல்லை, ஒட்டக் கூடாது. உதற னும்னு நினைக்கறேன். செயல்பட மாதிரி நினைச்சுக் கறேன். ஆனால் மாட்டிக்கறேன். உழல்றேன். தனிமை யைத் தேடறேன்னு வாய் சொல்றது. தனிமை தோணி னதும் மனம் ஒடறது - இது என்ன மர்மமோ? எதிர்ப் பட்ட ஒட்டலில் என்னத்தையோ சாப்பிட்டு விட்டு - ஆறிப்போன எல்லா ஒட்டலிலும் சேனைக் கிழங்கு தவிர மற்றெல்லாக் காய்கறியும் மறந்தே போயாச்சு. மறு தடவை கேட்டால் காது கேட்பதேயில்லை. போயிண்டே யிருக்கான், மோரே! உன் மாற்றுப் பேர் கழநீர் - மறுபடியும் நடைதான். இந்த ஒரு நாள் நடையில் பூமியின் எல்லைக் கோடுக்கே போயிடுவேன் போலிருக்கு, அப்புறம் சமுத்திரத்தில் தொபகடிர் தான்... நாயைச் சொல்கிறோம், நான் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறேன்? கணக்கெடுத்துப் பார்த்தால் குருட்டு யோசனையும் வெறிச்ச நடையும் உணவு நேரம் துரக்க நேரம் போக உருப்படியா வாழ் நாளில் என்ன மிச்சம்; என்னதான் மிஞ்சினாலும் எல்லாம் கடைசியில் கணக்கன் உயிர் கொண்டு போகையில் எல்லாம் ஸ்ைபர். சம்பிர தாயச் சிந்தனைதான். ஆனால் அதான் யதார்த்தம். பார்க் ஒன்று குறுக்கே வந்தது. ஒன்று, சுற்றிப் போகணும். அல்லது குறுக்கே நடந்து எதிர்ப்புறம் போகலாம்.