பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

கல் சிரிக்கிறது


பெஞ்சடியில் விழுந்திருக்குமா? தன்னையே ஏமாற்றிக் கொள்ளும் ஆசையில் இன்னும் பரவலாகத் தேடினதில் ஒரு பூந்தொட்டியுள் பர்ஸ் கிடந்தது. காலியாக. சர்வ பழசு. அடித்தவனுக்கு எடுத்துப் போக வெட்கம். அவ் வளவு கந்தல். ராசி என்று காப்பாத்தின அதன் மகிமை இன்றோடு ஒய்ந்தது. அதை யெடுத்தவன் கைக்கெடி காரத்தை ஏன் விட்டான்? அவிழ்க்கும்போது விழித்துக் கொள்வேன் என்ற பயமா? கழுத்தை நெரிக்காமல் விட் டானே, அந்த மட்டும் புண்ணியவான். உனக்கு வந்தன மப்பா. நானாக இன்று இதுவரை நடந்தது போக என் திரும்பு வழின்ய நீ நடக்க வைத்து விட்டாய் ! இது கடவுள் அடிக்கிற ஜோக். மேம்பாலத்தடியில் கொத்தாய் ஒடுங்கிய பத்து வீடு கள் நடுவில் அவள் கொடுத்த விலாசத்தைக் கண்டு பிடித்துக் கதவைத் தட்டும் வேளைக்கு நன்றாக இருட்டி விட்டது. வந்துரட்டீங்களா லார் உள்ளே வாங்கோளேன் : அடுப்படி வேலைப் புழுக்கத்தில் அவள் முகத்தில் எண் ணெய் கசிந்தது. அது அவளுக்கு நன்றாயிருந்தது. சில பேர் எப்படியோ - அவர்களிடம் ஏற்கெனவே அசைக்க முடியாதபடி விழுந்திருக்கும் நம் நல்லெண்ணமும் கார ணமோ என்னமோ - அவர்களே தாயான பிறகும் கூட அவர்களிடம் ஒரு மழலைத்தனம் மிளிர்கிறது. பிடித்தவர் களுக்குப் பிடிக்கும். பிடிக்காதவர் பற்றி நமக்குக் கவலை வில்லை: இந்த நாளில் வாடகைக்கு விடும் இடத்தில் ஒரு சதுர அங்குலம்கூட வீணாவதில்லை. வீட்டுக்காரனுக்கு எல்லாம் பணம். தாழ்வாரம் என்று சொல்வதா, நடை பாதை என்பதா? அதை அளவெடுத்து அடைத்தாற்போல் ஒரு ஸோபாசெட் ("மாதத் தவணைத் திட்டம்"), மேலே ஒரு மின் விசிறி விசையாகச் சுற்றிற்று. சதா சர்வ காலம் சுத்திண்டிருக்க வேண்டியது தான். இல்லாட்டா கொசு அப்படியே அப்பிவிடும். இந்த