பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா.

37


இடத்துக்கு இருநூறு ரூபாய் வாடகை. இப்போ காலி பண்ணினால் அடுத்து வருபவனுக்கு இருநூற்று ஐம்பது ரூபாய். முன்பசிக்குக் கொஞ்சம் நொறுக்குத்தீனி! சிரித்துக் கொண்டே கோமதி ஒரு கையில் ஒரு சின்ன எவர்ஸில்வர் தட்டும் மறு கையில் தம்ளரில் ஜலத்துடனும் உள்ளிருந்து வந்தாள். நேற்று காராசேவ் பண்ணினேன்.' அவரைச் சில வினாடிகள் கவனித்துக் கொண்டிருந் தவள், புன்னகை புரிந்தாள். நிஜமாவே ஸார், நீங்கள் ஒரு நாசூக்கான மனிதன் ! உங்களைப் பற்றிய ஒவ்வொரு, விஷயமும்...' மேலே வார்த்தை கிடைக்காமல் கைவிரித் தாள். 'இது போல் நாகுக்காக இருக்கணும்னு எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா?" - 'நீ ஒண்ணு சாப்பிடு. - ஒரு துண்டு பொறுக்கி, நீட்டினார். 'இப்போதுதான் தின்னேன். போக வர என்ன வேலை? புளியம்பொந்தில் கை விடுவதுதான்' - வாங்கி: வாயில் போட்டுக் கொண்டாள். காபி?’’ 'எனக்கு வேண்டாம்.' 'ஒரே ஒரு ஸிப் - ஒரு அங்குலம்தான் அளவு-?” 'நான் நினைத்து நினைத்துக் குடிப்பது இல்லை.” நான் குடிப்பேனே ! உங்கள் சாக்கில எனக்கு என்ன சொல்றேள்?’’ சரி, அப்படியே. எங்கே உன் ஆத்துக்காரரைக் 2 * * காணோம்: 'அவர் வர மணி எட்டாகும்.'

  • உன் பையன் எங்கே?'

'துரங்கறான்.'