பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா.

39


கொக்கி மாட்டி மாலை தொடுத்துக் கொள்வதைப் புலன் பூர்வமாக நுகரலாம். வேளை அவ்வளவு துல்லியமாகத் துளிர்த்தது. 'கோமதி !’

  • ஊங்ங்? - போதையிலிருந்து அவள் சரியாக மீள வில்லை.

'என்னை மன்னிச்சுடு-' அவள் விழிகளில் வினா. இரு கைகளையும் இரு ஜேபிகளிலும் விட்டு உள் துணியை வெளிக்கு இழுத்துக் காட்டினார். புன்னகை புரிந்தாள். இன்னிக் காலையில்தானே ஏ. ஸி. ஹோட்டல்?’’ . 'மாலையில் ஜேப்படிச்சுட்டான். குழந்தைக்கு ஒரு பிஸ்கட் கூட வாங்கிண்டு வரமுடியலே. உனக்கு ஒரு முழம் பூவுக்கு வழியில்லே. இன்னி பூரா நடராஜா சர்விஸ்,!' சொன்னது முற்றிலும் மனதில் தோய, சற்று நேர மாயது. ஆனதும் பீறிட்ட அந்தச் சிரிப்பில் அவரே அசந்து போனார். அதுக்கு இவ்வளவு சிரிப்பா? ஏதோ இத்தனை நாள் உள்ளே அடைத்துக் கிடந்த ஒரு வேகம் கார்க் எகிற இது சாக்கில் சிரிப்பு ரூபத்தில் பீச்சி யடித்தாற் போல், சிரிப்பு ஊற்றாக வந்தது. ஓடிவந்து சோபாவில் விழுந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள். புரை கூட ஏறி விட்டது. உச்சந் தலையைத் தட்டிக் கொண்டாள். ஹிஸ்டீரியா? பொம்மனாட்டிகள் வினோதமான பிராணிகள்! 'மன்னிச்சுக்கோங்கோ. இல்லை இல்லை, மன்னிக்க வேண்டாம்.'அலை ஒய்கிற மாதிரி தோன்றிய சின்னங்கள் மறைந்து, மறுபடியும் சிரிப்பு. கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.