பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

கல் சிரிக்கிறது


'இல்லை, நீங்கள் அப்படி ஜேபியை உள் பக்கத்தை வெளியே இழுத்துண்டு நின்னப்போ எனக்கு எப்பவோ சார்லி சாப்ளின் மார்னிங் ஷோ ஞாபகம் வந்துடுத்து.' ப்ரஷர் குக்கரின் நீண்ட உஸ் சீறல் உள்ளிருந்து வந்தது. அவளை அவர் சமையலறைக்குத் தொடர்ந்தார். "என்ன சமையல்?” 'சாம்பார்-என்ன முகத்தைச் சுளிக்கறேள்? சாம் பார் பிடிக்காதா?’’ 'காலையிலே சொன்னேனே, எனக்குப் பிடிச்சது உனக்குத் தெரியுமேன்னு. உனக்குத் தெரியாதா?’’ 'வத்தல் குழம்புதானே, என்ன சார், இருந்திருந்து இத்தனை வருஷங் கழிச்சு வந்திருக்கேள், ஒரு சாம்பார் கூட இல்லாமலா? அதனால் என்ன, வத்தல் குழம்பையும் வெச்சால் போச்சு.” 'இதென்ன குடித்தனமா, தடித்தனமா? வீடா, ஒட் டட்லர்? ஒண்னு செய். பருப்பை ரஸத்தில் போட்டு விடு.' 'அதுவும் ஐடியாதான். வத்தல் குழம்பு, பருப்பு ரஸம், உருளை மசாலா கறி.” ஜிப்பாவைக் கழற்றி யெறிந்ததில் குறி பார்த்தாற் போல் அது சோபாவில் போய் விழுந்தது.

  • என்ன ஸ்ரர்?’’

'நான் சமைக்கப் போறேன்.” 'வாட்? குத்துக்கல் மாதிரி புடவை உடுத்திண்டு வீட்டுக்குப் பொம்மனாட்டியா நிக்கறேன். நீங்க என்ன சமைக்க வரது? அதுவும் சாப்பிட வந்த இடத்தில்?’ "ப்ளீஸ், நான் சமைத்தால் உனக்கு ஆகாதா?