பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G)fア。●ー。写「fア。 摩萝 ஆசாரக் குறைவா மடிசஞ்சி மாமியாரை அலமாரியில் பூட்டி வெச்சிருக்கையா?” போதுமே என் ஆசாரம்' 'பின்னே என்ன, என்னை என் இஷ்டத்துக்கு விடு. நான் சமையல் பண்ணி, நீ சாப்பிடணும்னு எனக்கு ஆசையாயிருக்குன்னு வெச்சுக்கோயேன்.' 'எனக்கு என்னவோ மாதிரி யிருக்கு சார்!”

  • * v v v ' o

'அப்போ எனக்கென்னதான் வேலை?” 'அடுப்பங்கரையில் வேலைதானா இல்லை? சுற்றுக் காரியம் எல்லாம் உன்னதுதான். முதலில் உப்பு, புளி, மிளகாய் எங்கெங்கிருக்குன்னு நீதானே எடுத்துக் கொடுக் கனும். குழம்பு வைக்க கல் சட்டியோ மண் சட்டியோ இருக்கா? குக்கரைக் கீழே இறக்கிடலாம்னு நினைக் கிறேன். இலுப்பச் சட்டி எங்கே?' காரியங்கள் அவைகளின் போக்கில் இதற்குப் பின் இது என்று அதன தன் வரிசைக் கிரமத்தில் விழுந்த பின் எல் லாமே படிமானமாகி விட்டது. உருளைக் கிழங்கைத் துண்டம் போட்டுக் கொண்டே, 'இதெல்லாம் எப்போ கத்துண்டேள்? உங்களுக்குக் கைவாசம் இருக்கு ஸார். காயறபோதே குழம்பு மணம் கூரையைத் துரக்கறதே!' 'ஏதோ ஒரு வனஸ்பதிக்கு வெளிப் பிரயாணம் செய். யும் விற்பனையாளனாக மூணு வருஷம் வேலை பார்த் தேன். ஆந்திரா ஸ்டேட், ஒட்டலில் அந்த மிளகாய்க் காரம் நாம் சமாளிக்கறதா இல்லை. குடல் வெளியில் வந்து விடும்போல் ஆயிட்டுது. சரி, சமையல் களத்தில் குதித்து விட்டேன்.'