பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

கல் சிரிக்கிறது


"சார், எனக்கு வயிறு கபபகன்னு பசிக்க ஆரம்பிச் சுடுத்து. குழம்பு காஞ்சாச்சா?” 'ஒன்றும் ஆகலை. காத்திரு மகளே, காத்திரு. அது அது அதனதன் நேரத்துக்குக் காய வேண்டாமா, வேக வேண்டாமா? அப்போத்தானே பக்குவத்தை அடை யும். ஆனால் என் சமையல் சம்பிரதாயச் சமையலா யிருக்காது. நாலு திக்கும் அதில் கலந்திருக்கும்-என்ன ஒரு நாழியா என்னை முறைக்கிறாய்?" 'நீங்கள் இருக்கேளே, ஸார்?’ 'நீ வேடிக்கையாப் பேசறேன்னு அர்த்தமா, நான் சிரிக்கனுமா?" 'இல்லை. நான் ரொம்ப nரியஸா இருக்கேன். எனக்கு அப்படித் தோணறது. நீங்கள் இருக்கேள் - இல்லை.” அவர் ரஸத்தைக் கிளறிக் கொண்டே, புன்னகை புரிந்த வண்ணம் - ம்ம்... அடுத்தது என்ன?...' 'இன்னி காலையிலேயே சொன்னேன் போலிருக்கு, உங்களிடம் ஒரு பிடிபடாத தன்மை - ஸார், உங்களுக்கு: இந்த வயசில் தலை மயிர் இவ்வளவு அடர்த்தியா இருக் கேன்னு யோசனை பண்றேன். அவருக்கு இப்பவே உச்சி மண்டையில் நிலா காயறது.' 'விரல்கடை சீரகம் அம்மியில் நுணுக்கேன், இல்லை சிரமந்தானா? கோமதி, நான் கொஞ்சம் சீலக்காரன்தான், ஒப்புக்கறேன். செளந்தர்ய உபாஸ்கன், ஏதோ என் வழி யில், என்னால் முடிந்தவரை அழுக்குகள் எனக்கு ஆகாது. அது அது அதனதன் இடத்தில் பண்டத்துக்கேற்ற பாத் திரம், பாத்திரத்துக்கேற்ற பண்டம். ஒழுங்கு - சீர் - வரிசை.” 'ஆ நான் அப்பவே சொன்னேனே, நீங்கள் ஒரு நேர்த்தியான ஆசாமி! இதனாலேயே உங்களைச் சூழ்ந்து