பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா.

43


ஒரு யதார்த்தமற்ற உணர்வு. நீங்கள் கவிதையாகக்கூட இல்லை, கவிதையின் ஞாபகம் போல் தோன்றுகிறீர்கள். உங்கள் கலர், உங்கள் வெள்ளை ஆடை, அதனாலேயே உயரம் போன்ற பகட்டு எனக்குச் சொல்லத் தெரியல்லே ஸார். ஆனால் நெஞ்சில் இருக்கு. இந்த நிலையைச் சொல்ல இங்கிலீஷ்தான் திடீர்னு வரதே யொழிய தமிழ் முழுக்க முட்டுக் கொடுக்கவில்லை. இது நான்தான் பேச றேனா, இல்லை, நீங்கள்தான் இப்படிப் பேச வைக்க றேளா? தன் வெளியீட்டுக்கு இடம் தேடும் பொருள் ’’س-رGa_rrr G சமையல் முடிஞ்சாச்சு!" ஸார், மன்னிக்கணும். நெய் இல்லை!' யாருக்கு அக்கறை? ஆனால் எந்த தைரியத்தில் ம்பாரில் இறங்கினாய்?"

  • யாருக்கு அக்கறை?’’

முகம் கழுவித் துடைச்சுக்க சரியாயிருக்கும். ஹலோ, மணி எட்டரை ஆறது, இன்னும் உன் எசமான ரைக்கானோம்.' நாம் சாப்பிடுவோம். எனக்கு ரொம்பப் பசிக் கறது. ரெண்டு பேரும் உத்யோகம் பண்ணினா இதுதான் ப்ரச்னை. ப்ரச்னை என்ன, அதுவும் பழகிப் போச்சு. அவர் வர நேரமானால், நான் சாப்பிட்டு விட் டு, சாதங்களைப் பிசைஞ்சு டிபன் ஸெட்டில் வெச்சுட்டு, ஒழித்துப் போட்டு விட்டுப் படுத்துடுவேன். அவர் பாட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு . ஏனங்களைத் தொட்டி முற்றத்தில் போட்டு விடுவார். சாப்பிடாத நாட்களில் வேஸ்டும் ஆறதுதான். காலையிலும் வேலைக்குச் சுருக்கக் கிளம்பிப் போயிடுவார். மத்தியானம் வந்து ஆறின சோற்றைச் சாப்பிடுவார். எதுவாயிருந்தாலும் எப்படியிருந்தாலும் சரி, உண்மையில்