பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

கல் சிரிக்கிறது


அவரால் தொந்தரவு கிடையாது. ரொம்பப் பேசக்கூட மாட்டார். பாங்கில் வேலை எனக்கு முதுகு நரம்பு கழண்டு போறது. நீங்கள் செளந்தர் ய உபாசனையைப் பற்றிப் பேசினேளா, கேட்க அழகாயிருக்கு, ஆசையா இருக்கு. ஆனால் என் வாழ்நாளே ஆச்சா போச்சா அடிச்சுக்கோ புடிச்சுக்கோ அகப்பட்டதை அவசரத்தில் அடைச்சுக்கோ- அப்படியே ஆயிடுத்து ஸார். உங்களுக்கு இலை அவசியம்தானா? தட்டில் சாப்பிட மாட்டேளா? ஆபிஸிலிருந்து வரப்போ வாங்கிண்டு வந்திருக்கலாம். ஆனால் நினைப்பு இல்லை.” புன்னகை புரிந்தார். ஆபிஸ் வேலையில் கெட்டிக் காரியா யிருந்தால் வீட்டு வேலையில் வாங்கலாய்த்தா ளிைருக்குமோ? 'குழந்தையை எழுப்பலியா?” ‘'வேண்டாம். ராத்திரி எழுந்தால் பார்த்துக்கலாம். சார், நீங்கள் உட்காரப் போறேளா இல்லையா? நான் இன்னும் கொஞ்ச நாழிலே அழுதுடுவேன். உங்களுக்குப் போட்டுட்டு அப்புறம் நான் சாப்பிடணும்.” 'ஏன், ரெண்டு பேருமே சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டால் போச்சு.' 'ஓ! தாங்க் யூ! தாங்க் யூ! உங்களுக்குப் பரவாயில் லையா? அவனவனுக்கவன், எல்லாருக்கும் பொது கட வுள். பரவாயில்லையா? சுய சேவகம் பரம சந்தோஷம்.' தட்டில் புலுபுலுவென மல்லி போன்ற அன்னத்தின் மேல் பரவினால் போல் குழம்பை விட்டதும், அது உள் இறங்கி கலர் தோய்வதைப் பார்க்கவே சுவாரஸ்யமா யிருந்தது. அவள் குழம்பை விரலால் தொட்டு நாக்கில் வைத்து இழுத்ததும் அவள் கண்கள் விரிந்தன.