பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிப்பு 女 மரத்தை மறைத்தது மா மதயானை மரத்தில் மறைந்தது மாமத யானை - திருமூலர் 'உன் கடவுள் எங்கிருக்கிறான்?' "எங்கும் இருக்கிறான், தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான்.' 'அப்படியானால் இந்தத் துாணில் இருக்கிறானா?’, என்று துணை அறைந்ததும், உள்ளிருந்து சிரிப்புச் சத்தம் கேட்டது.' - ப்ரஹலாத சரித்ரம் தெய்வத்தைக் கல்லில் வடிக்கிறோம். நம் ஆர்வத்தி லும் ஆவாஹனத்திலும் ஆராதனையிலும் கல்லை மறந்து தெய்வத்தைப் பார்க்கிறோம். விக்ரஹத்தின் மந்தஹாஸ்த்தில் அத்தனை மயக்கு. உருவேற்றலில் அத்தனை உயிர்ப்பு. - நம் சமயத்துக்கேற்ப, நம் செளகரியத்தின்படி, அந்தச் சிரிப்பில் அர்த்தத்தைப் படித்துக் கொண்டு, உத்தேசித்த காரியத்துக்குத் தெய்வத்தின் அனுமதி கிடைத்து விட்ட தாக எண்ணிக் கொண்டு, காரியத்தில் இறங்குகிறோம், காரியம், எதிர்பார்த்தபடி அனுகூலமாக முடிந்தால், தெய்வம் சிரிக்கிறது என்கிறோம். மாறாகத் திரும்பி விட்டால், கல் சிரிக்கிறது, என்கிறோம். ஆனால், சிரிப்பது தெய்வமுமில்லை கல்லுமில்லை. எண்ணம்தான் சிரித்துக் கொண்டே யிருக்கிறது. ஆகவே பயத்துக்குரியது எண்ணம்தான். அதுவும் அவனவன். எண்ணமே-’ 9@雷。母。旷耶。 Plot 242, ஞானமூர்த்தி நகர். அம்பத்துர், சென்னை - 600 053, 1 - 1 1 - 1987