பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா.

47

. இந்த விஷயத்திலெல்லாம் நல்லவர். ஆட்சேபிக்கவே. மாட்டார்.' அடுக்குள் வேலை ஒரு வழியாக முடிந்தது. இருவரும் எதிர் எதிராக சோபா நாற்காலியில் உட்கார்ந்தார்கள். "எப்படி சார், இவ்வளவு வேலையைச் செஞ்சுட்டு: சோர்வில்லாமலிருக்கேள்?’’ "நான் என்ன செஞ்சேன்? அதிகாரம் பண்ணிண்டு. அடுப்பில் ஏத்தியிறக்கினேன். செஞ்சதெல்லாம் நீதான்!' 'இதென்ன புகழுரை, இகழ்ச்சி அணியா?” 'இல்லை இல்லை, சுற்றுக் காரியம் வேடிக்கை இல்லை, தெரியுமோன்னோ!' - 'ஸார், நீங்கள் பாங்கிலேயே தொடர்ந்து இருந்திருக் கலாம். இப்போ ஒரு நல்ல நிலைக்கு வந்திருப்பேள். பெரிய பாங்கிற்குத் தாவியிருக்கலாம்.' 'அதெல்லாம் என் இஷ்டமா, உன்னிஷ்டமா? சகடக்கால் ஜாதகம். அப்படியிருந்திருக்கலாமோ, இப்படி செஞ்சிருக்கலாமோ என்கிற வருத்தங்கள் என் சுபாவத் திலேயே கிடையாது. வருத்தம் தெரியாத மனிதன் .' 'நீங்கள் அன்னிக்கு என்னைப் பரீட்சை பண்ணி வேலைக்கு எடுத்துண்ட என் நல்ல காலம், இன்னும் கை. கொடுத்துண்டிருக்கு.' 'இல்லை, இல்லை. நீ வேலையில் பலே, தெரியு. மோன்னோ? தாட்சண்யமே இல்லை. உன் சுருக்கெழுத்து, வேகம் மட்டானாலும், உன் எழுத்துக் கூட்டல் ரொம்ப நல்லாயிருந்தது. இங்கிலீஷ் அறிவு இருந்தது. நமக்கும் பந்தங்கள் வளர்ந்தன. உனக்கு ஒரு பாப்பா முகம், தொயுமோன்னோ?” 'கொழகொழ கண்ணே-' என்றாள். 'இப்போ கூட தேடினால் பழைய அடையாளங்கள்