பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

கல் சிரிக்கிறது


கொஞ்சம் கொஞ்சம் கிடைக்கும். அந்தக் கன்னத்துக் குளுப்பானில், கொஞ்சம் மொண்ணை மூக்கில், கோண வகிடில்-' 'இல்லை, விமலா வகிடு.' 'நீ சிரிக்கறப்போ உன் கண்ணுக்குள் ஆழத்தில்மகிழ்ச்சியின் பொங்கலில் அவள் முகம் ஒளி வீசிற்று. 'உங்களுக்குத் தெரியுமா ஸார் , அப்பவே நம்மைப் பத்தி சுத்துப் பட்டாளம் கதை கட்டப் பாத்தாங்க. "அப்பாவும் பொண்ணும் எப்படி இழையறாங்கபாத் தியா?ன்னு.' 'எனக்குத் தெரியாதா என்ன? நல்ல வேளை, அத்தோடு விட்டாங்களே! அதுவும் உங்கள் யூனியன் லிடர் கொஞ்சம் கூடவே பண்ணப் பார்த்தான். நம்ம ரெண்டு பேர் மேஜையும் பக்கத்தில் இருக்கக்கூடாது. உன் மேஜையைக் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளியாகணும்னு அடம் பிடிச்சு - அப்போ அவன் கொடி கட்டிப் பறந்த நாள் - ஜயிக்கவும் ஜயிச்சுட்டான். நான் அப்ப வெறும் செக்ஷன் ஆபிஸர்தானே! அந்த மானேஜருக்கு நரம் பில்லே. நான் லெட்டர் டிக்டேட் பண்ற மாதிரி உன் பக்கமா சாஞ்சு உன் பிராவுக்குள் எட்டிப் பார்ப்பேனாம். இப்போ நினைச்சாக்கூட ஆத்திரம் வரது.” タ அவர் முகம் குங்குமப் பிழம்பாகி விட்டது. நானும் கொழகொழ கண்ணேன்னு இருப்பேன்!' என்று சிரித்தாள். அவர் சிரிக்கவில்லை. பொருமினார். “எது எது வக்கிரமோ அதெல்லாம் இப்போ நார்மல், எது நார்மலோ அதன் மேல் சந்தேகப் பார்வை. எல்லாம் தலை கீழ்ப் பாடம். உனக்கும் எனக்கும் வயது வித்தி யாசம் என்ன? உறவு இல்லே, அப்பா - பெண் உணர்ச்சி நம்மிடையில் இருக்கக் கூடாதா? மனிதன் ஆதரவை