பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

கல் சிரிக்கிறது


விட்டாலும் போறாது. பெரிய இடத்தில் சம்பந்தம் பண்ணியிருக்கிறீர்கள். சாபமடி கோமதி. உனக்கு விமோ சனம் எப்படி? நான் இங்கு ஏன் வந்தேன்? "கடன் தொல்லை தாங்க முடியவில்லை. இங்கே தான் என்று இல்லை. மாரியம்மன் விழாவில் எலுமிச்சம் பழம் குத்திண்ட மாதிரி அறுந்து தொங்கறது. அவர் சம்பளத்தைக் கண்ணில் கூடக் கட்டினதில்லை. ஒரு பக்கம் அடைச்சுண்டே வருவேன்; பொத்தல் கூடை இன் ஒனாரு இடத்தில் பிச்சுக்கும். இதுவும் ஒரு பிழைப் பான்னு நடந்துண்டு தானிருக்கு. யாரும் செத்துப் போயி உல்லே, ஒண்னு பிறந்து வளந்தாச்சு. இன்னொண்ணு பிறக்கப் போறது. அம்மா கல்லு கல்லாய்ப் பூட்டியனுப் பிச்ச அவள் நகையில் வித்தது போக, வெச்சதுபோக, மிச்சம் இதுதான் - மஞ்சள் கயிறை வெளியில் எடுத்து ஆட்டினாள். - ஆரம்ப அதிர்ச்சி நாளடைவில் மாறும் தன்னிரக்கத் தில் நேரும் தராசின் பாரபrத்தில், இந்தக் குளறுபடி பில் யார் பங்கு எவ்வளவு என்று நிர்ணயிப்பது? நிர்ண யிக்க நான் யார்? நிர்ணயித்தாலும் அதனால் ஆகிற காரியம் என்ன? ஒயாத கதை. யாரும் கழற்றிக்க முடி யாது. முடியவே முடியாது. இதுவும் நம் பண்பாடுதான். ஆனால் முறிச்சுண்டு போறவாளுமிருக்கா, என் பெண் உாட்டி மாதிரி-பெண்டாட்டி ஏது, மதுவின் தாயார் இருவரும் சற்று நேரம் அவரவர் சிந்தனையில் ஆழ்ந் திருந்தனர். 'கோமதி, உனக்கு எவ்வளவு கடன் இருக்கும்?" 'ஐயாயிரம்.' -

  • என்ன?’ ’

"ஆமாம். அத்தனையும் என் பேரில். வேணும்னு தான் வெச்சிண்டிருக்கேன். என்னிக்கேனும் ஒரு நாள்