பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா.

53


நல்ல காலம் வந்து-எனக்கே சிரிப்பாய்த்தான் வரதுநல்ல காலம் வந்து ஒரு நாள் மீட்க மாட்டேனா என்கிற சபலம்தான். நம்பிக்கைக்குப் பூட்டு கிடையாது. அவர் பேசில் இருந்தால் நகையெல்லாம் இத்தனை நாளைக்கு விற்றாகியிருக்கும். கண்ணில் காட்டியிருக்க மாட்டார். ஸார், நான் உங்களைக் கேட்கணும். இத்தனை நாளா இந்த மனுஷன் சீட்டு ஆடிண்டிருக்கானே, ஒரு தடவை கூட ஜயிச்சிருக்க மாட்டானா? எப்பவும் தோல்விதானா? அப்படி ஒரு ஆட்டம் உண்டா என்ன? அப்படியானால் அந்த ஆட்டத்தில் என்ன ஆர்வம் இருக்க முடியும்?’’ 'அட அசடே அவர் ஜயிச்சதெல்லாம் உன்னிடம் சொல்லுவாரா? ஒண்னு தெரிஞ்சுக்கோ. எல். ஐ. சி. எம்ப்ளம் போல் இவர்கள், ஆசைச் சுடரைப் பொத்திக் காப்பாற்றுவதே, ஜயிப்பு, தோற்பு என்கிற இரண்டு கைகள்தான். ஜயிச்சால், அடுத்த தடவை இதுக்கு மேல் ஜயிக்க மாட்டோமா? தோற்றால், அடுத்த தடவையாவது ஜயிக்கமாட்டோமா? என்றைக்கும் நம்பிக்கையை விடாதே. காண்பது தோற்பு. ஆனால் நினைப்பது ஜயிப்பு. இவர் கள் நம்பிக்கைக்கு அழிவும் கிடையாது. சலிப்பும் கிடையாது. ஆசை அழியாச் சுடராக எரிந்து கொண் டிருக்கும். மனிதனை அழித்துக் கொண்டிருக்கும். நகையைப் பாங்கிலேதானா வெச்சிருக்கே?' "எங்கள் பாங்கில் நகை மேலே கொடுக்கறதில்லே. அப்படியே பாங்கு கொடுக்கும் ரேட் எங்களுக்குப்பத்துமா? ஒரு சேட்கிட்ட வெச்சிருக்கு. அதுக்கே ஏகப்பட்ட சிபாரிசு. அவன் நகை மேல் பிஸினஸ் பண்ணல்லே; அவன் பண்றது எம்ப்ராய்டரி பிஸினஸ். கொடுத்தாலும் ரொம்பத் தெரிஞ்சவாளுக்குத் தாட்சண்யத்து மேலே யாருக்கும் தெரியாமல்-பிஸினஸ் பண்றதுன்னா லைசென்ஸ் வாங் கனுமாமே-போனால் போறதுன்னு கொடுத்திருக்கிற மாதிரி அர்த்தம். வாங்கறதென்னவோ இரண்டரை சத விகிதம் வட்டி தான். வெளியில மூன்றாம்.'