பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1


ம்மா” கமலாம்பிகே! அர்ச்சனைக்குப் பதிலாக உன்னைக் கல்லால் அடிக்கணும். ஆனால் நீ தாங்கிப்பே உனக்கு அவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கு. இல்லேன்னா, இந்த ஒரு வாரமா, தட்டுலே தடவித் தடவி எடுக்கற மாதிரி வைப்பியா? இத்தனை நாளில்லாத புது ராங்கி, புது வாழ்வு என்னடி உனக்கு இப்போ வந்துடுத்து? தர்ம கர்த்தா என்னடான்னா, நீ தங்கப் படியிலே தினம் பொற் காசை அளந்துடற மாதிரி வயிறு எரியறான். அர்ச்சனைக் குச் சீட்டு ஸிஸ்டம் கொண்டு வந்துடனும்னு துடிக்கறான். ஏன்னா இங்கே பக்தர் கூட்டம் பாலாஜிக்குத் தட்டுக் கெட்டுப் போறது பாரு மாஸச் சம்பளத்தை ஏழு தேதிக்குப் பட்டுவாடாபண்ண மீன மேஷம் பார்க்கறான். இவன் கொடுக்கற ஒட்டாண்டிச் சம்பளம் ஒரு மாஸ்த்துக் காப்பி, அஸ்கா, பாலுக்கு முழுக்கக் காண்றதாடி? அப் படியும் ஒண்னும் திக்கா போட்டுக் குடிக்கறதில்லே. எட்டு அடிச்சாச்சு. முழுக்க மூணு தேறல்லே. கதவைப் பூட்டிண்டு கிளம்ப வேண்டியதுதான். வாவா, நாளைக்கு உனக்கு நைவேத்யம் அன்னம் அல்ல. ஏனம் நிறைய மண், கெளரவமா மேலே துணியைப் போட்டு மூடி.”


அவள் அருண்டுவிட்டதன் அடையாளமா, கொத்தாக நாலு பக்தர்கள் பிரத்யக்ஷமாயினர். அவர்களுள் ஒருவர் அஷ்டோத்ரம்,


ஒருவர் சற்று ஒதுக்கமாகத் தயங்கி நின்றார்.


'பிள்ளைவாளுக்கு என்ன வேனுமோ?’’

"வெள்ளிக் கிழமை, அபிஷேகம் பண்ணி, தோம்பு சாத்தணும்.”