பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா.

55


அவள் கை கூப்பினாள். அழுகை மறுபடியும் பீறிட்டுக் கொண்டு வந்தது. 'இப்படி என்னை நிறுத்தி வெச்சுக் கேட்டால் என்ன பண்ணுவேன்?’’ "ஆமாம். நிறுத்தி வெச்சுத்தான் கேக்கறேன். கேக்கணும்னுதான் கேக்கறேன். உன் உண்மையை நேர் முகமாய்ப் பார். உன் மேல் உனக்கு நம்பிக்கை யிருந்தால் பதில் சொல்; இல்லாட்டா வேண்டாம்.' கண்ணிரைக் கன்னத்திலிருந்து வழித்தெறிந்தாள். அவள் குரல் தீர்மானம் கொண்டது. திடம் கொண்டது. 'இந்த ரீதியில் நம்பிக்கையில்லைதான்.' 'அப்படியானால் அவர் இல்லாமல் நீ வாழச் சித்தமாயிருக்கையா?” விழித்தாள். அவளையுமறியாது அவள் கை கழுத்துச் சரடை நாடி நெருடிற்று. 'அவரை நீ விஷம் வைத்துக் கொல்லனும் என்று நான் சொல்லவில்லை. நம் நாட்டுக்குச் சுதந்திரம் வந்த பிறகு இருந்து விட்டுப் போறதுன்னு விவாக ரத்துச் சட்டமும் வந்திருக்கு. அது இல்லாமலே தாலி நிழலிலும் அக்ரமங்கள் நடக்கிறது. நீ விவாகரத்து பண்ணிண்டு மறு விவாகம் பண்ணிக்கணும்னு கூட நான் சொல்லவில்லை. ஆனால் உன் குழந்தையின் விடிமோட்சத்துக்கேனும் நீ அவரைப் பிரிஞ்சு வாழவேண்டியதுதான். இல்லையேல் தன் சுழலில் உங்கள் எல்லோரையும் அவன் இழுத் துடுவான். உனக்கு உன் உத்யோகமிருக்கு. உன் குழந்தையாச்சு. தனி வாழ்க்கை பெரிய கஷ்டமில்லை. இது முழுக்க அறிவார்த்தமான கேள்வி. இது நாளைக்கே நடக்கப் போகிற காரியமும் இல்லை. இன்னி ராத்திரி மூணு மணிக்கு அவர் வந்து கதவைத் தட்டினால் நீ திறக்காமல் இருக்கப் போறதில்லை - தருமராஜன் ஸ்ார் சொன்னாரேன்னு. ஆனால் இதில் உன் மனோநிலை என்ன?’’