பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. 15டை அலுப்பில் அடித்துப் போட்டாற் போன்ற துக்கம். மாத்திரை கூட மறந்து விட்டது. இந்த அயர் விலும் ஏதோ ஒரு நுண் உணர்வின் ஊடுருவலில் கண் விழித்தால்-எதிரே நாடார், தன் மதலைச் சிரிப்புடன், விபூதி மடலுடன். பின்னால் ஆச்சி, தொங்கும் குழை களுடன், துணி மூடிய தட்டுடன். கண்ணை ஒரு தரம் கசக்கிக் கொண்டார். துரக்கத்திலிருந்து விழிப்பு வழிந்து விட்ட கனவா? இல்லை, நனவேதான், நாடாரேதான். 'என்ன நாடார்?' 'இடியாப்பங்க." என்னத்தையோ கேட்டால் என்னவோ ஒரு பதில். இப்படியும் ஒரு அப்பாவியா? அப்பாவிதானா? லேசான, அர்த்தம் புரியாத ஒரு கோபம் லேசாய் நெஞ்சைப் பிராண்டிற்று. 'நாடார், நேற்றுப் பசி, அதனால் நானே கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன். இன்றைக்கு அதுமாதிரி கெடுபிடி ஒண்ணுமில்லை. இன்னிக்குத் தேவையில்லை.” நாடார் அழுது விடுவார் போல் முகம் பிசைந்தது. "ஐயா! அப்படிச் சொல்லாதீங்க. நேற்று சாமி வாய் மலர்ந்து எனக்குக் கொடுத்த தைரியத்தைப் பிடுங்கிக்கா தீங்க.' 'நாடார், எனக்கு இவ்வளவு பெரிய பூச்சூட்டல் வேண்டாம்.'