பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

கல் சிரிக்கிறது


'நாடார், நாம் இப்படியே கண்ணாமூச்சி விளையாடிண்டிருந்தால் எப்படி?’’

“எனக்கு வாழ்வு கொடுத்ததே சாமிதான். சாமி. கிட்ட என் விஷயம் பூரா ஒப்படைச்சாத்தான் எனக்கு மனசு நிம்மதி காணும்.” “என்னவோ புதிர் பேசறீங்க. நாடார், இப்படிக் குந்துங்க. இதோ கட்டில்லே. என் பக்கத்துலே, பரவா யில்லை.” “இல்லேங்க. நிக்கறேங்க. அதுதான் ஒழுங்கு. இப்போத்தான் ரெண்டு வருசமா கல்லாவுலே ஒக்காந்திருக்கே னுங்க. முன்னாலே எல்லாரோடும் நானும் சேர்ந்து கஸ்டமரைக் கவனிப்பேங்க. அதுதான் ஒழுங்கு. எனக்கு, நின்னு பழக்கந்தானுங்க. ஆரம்பத்துலே கடையிலே நிக்கறதுக்கே மெனக்கெட்டுப் பழக்குவாங்க."

"கடவுளே, இந்த நாடகம் எப்போது முடியும்? சரி, நாடார். உங்கள் இஷ்டம். நான் சொன்னாலும் கேட்க மாட்டீங்க.”

நாடார் தலையைத் தடவிக் கொண்டார்."எங்கே ஆரம்பிக்க? புரியறதில்லே." "ஆரம்பத்திலிருந்தே ஆரம்பிங்க." “அதுதான் சரி”- நாடார் முகம் மலர்ந்தது. அதுக்குத்தான் சாமி வழி காட்டனும் என்கிறது. சாமி அடியெடுத்துக் கொடுத்தபடி-நம் ஊர் தென்காசி. ரொம்ப ஏழ்மையான குடும்பம், பெரிய குடும்பம்" அத்தனை வயத்துக்கும் போட்டாவணும்னா, அன்னாடம் முழுக்கஞ்சிக்கு லாட்டரி. சொந்த நிலம் கிடையாது. 'ஆனால் நாளுக்கு நாள் வயிற்றுக் கொடுமை. சமாளிக்க முடியல்லே. ஊர் அப்படி ஒண்னும் பஞ்சம் பிடிச்சதில்லை. மானம் பார்த்த பூமியில்லே. ஆனால்