பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

கல் சிரிக்கிறது

. யும். நமக்குள்ளது நாட்டு வைத்தியம். அட கஷாயம். ஆத்தா கையாலே காய்ச்சின கஞ்சி. மூணு மாதம் ஆளை அடிச்சுப் போட்டுட்டுது. அதுலே இடையிலே மூணு வாரம் நினைப்பே யில்லையாம். புளைச்சது குத்தால நாதன் புண்ணியம்னு ஆத்தா சொல்லிச்சு. கிளிச்ச நாராக் கிடந்தேன்- தம்பி ஒண்டியா காய்கறிக் கடை, இட்டிலிக் கடை ரெண்டையும் பாத்துக்க முடியல்லே. இவதாலிக்குப் பயந்துகிட்டு கூடவே ஊருக்கு வந்துட்டா. இட்டிலி தானே நின்னு போச்சு காய்கறிக்கடையும் படுத் துப் போச்சு. ஒண்டியே சரக்கும் பிடிக்கணும், கடையும் பாத்துக்கணும், தானும் சமைச்சுச் சாப்பிடணும்னா நடக்கற காரியமா? போட்டிக்கு ரெண்டு கடையும் எதிரே முளைச்சுட்டுது. சரியான சோதனைக் காலம். மூட்டை யைக் கட்டிக்கிட்டு தம்பியைத் திரும்பிடச் சொல்லவா?

  • ஆத்தாகிட்ட யோசனை கேட்டா என்ன சொல் லும்? என்கிட்டே இருந்ததைக் கொடுத்தாச்சு. நான் கை கொட்டினால் காப்புச் சத்தம் கேக்காது. கைச்சத்தம்தான் கேக்கும். நீங்க எங்கு இருந்தால் எனக்கென்ன? நான் இங்கேதானே இருக்கேன்.”

'ஆத்தா எடக்கா நல்லாப் பேசும் . அந்தப் பேச்சுக்கு மறுப்பும் பேச முடியாது. அதுலே உண்மை யிருக்கல்லே? "இனிமேத்தான் விசயத்துக்கு வரேனுங்க. அன்னிக்கு வெள்ளிக் கிழமை. சுரம் விட்டு மூணு நாளாவுது, இன்னும் உடம்புக்கு ஊத்திக்கல்லே. சிம்மக் குட்டி புதுப் பிறப்புடா! 'நிக்கக்கூட தள்ளல்லே. விடிகாலைகிணத்தடியில் பல் விளக்கிட்டிருக்கேன். தூக்கம் தெளியல்லியா, மயக்கமா தெரியல்லே. பல் விளக்கிட்டேன். அப்போ பளிச்சுனு திடுதிப்புனு வந்தது தெரியாமல் களுத்திலிருந்து காலை மறைச்சு தும்பையாட்டம் வெள்ளை உடுத்தி, ஐயா கிணத்தடியில் நிக்கறாஹ.'