பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா.

63


'என்ன?’ தூக்கி வாரிப் போட்டு அவர் எழுந்து உட்கார்ந்தார். "ஆமா, சாமியேதான்-’’ " நாடார், பூ சுத்தினிங்க, இப்போ காது குத்தறிங் களா?’’ நாடார் உச்சந் தலைமேல் உள்ளங்கையை வைத்துக் கொண்டார். 'ஐயா, ஆணை வைக்கக் கூடாதுன்னு பெரியவங்க சொல்லுவாஹ. ஆத்தாளும் அதுதான் சொல்லும். ஐயா குலமென்ன, வயசென்ன, புத்தியென்ன: கேடுகெட்டவன் நான். நெருப்போடு விளையாடலாமா? ஐயாவுக்கு இதுவே வியப்பா இருக்கு. ரெண்டு மாதங் களுக்கு முன் ஐயா மாடிக்குக் குடி வந்தபோது, முதன் முதலா நான் சாமியைப் பார்க்க நேர்ந்தபோது, ஜயாவை அடையாளம் கண்டுகிட்டபோது, எனக்கு எப்படி இருக்கும்? சாமி நினைச்சுப் பார்க்க வேண்டிக்கறேன். மூணு வருஷத்துக்கு முன்னால் சாமி வழி காட்டிய தோடல்லாமல், கூடவே துணையிருக்கவும் வந்திருச்சின்னு. நினைக்கறப்போ நான் என்ன புண்ணியம் செய்தேன்! என் புண்ணியம் மட்டுமல்ல, ஏதோ முன் தலைமுறைக் கொடுப்பனை-’’ 'இதென்னய்யா கூத்து? முன்னே பின்னே ஒருத்தரை யொருத்தர் பார்க்காமல் நினைப்பில் நான் எப்படி வர முடியும்? இதை எப்படி நம்பறது? நாடார், நீங்கள் கண்டது தூக்கத்தில் கனவுகூட அல்ல. அப்படி எத், தனையோ பேத்தல் வரும். அதில் நீங்கள் இப்போ என்னைக் கண்டதை வெச்சுகிட்டு கனவில் கண்டதா உங்களையும் ஏமாத்திக்கலாம், கேக்கறவனையும் ஏமாத்த லாம். இப்பவும்தான் ஏமாத்துக்கு வழியில்லையா என்ன? இதுவேதான் வழிதானோ என்னவோ? நீங்கள் சத்தியம் பண்ணினால் நான் நம்பனுமா என்ன?” நாடார் உச்சந்தலையில் மறுபடியும் உள்ளங்கையை வைத்துக் கொண்டார்.