பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●sr. ザ。好fT・ 密密 அவர் நெற்றிப் பொட்டை இரு கைகளாலும் அழுத்திக் கொண்டார். 'இந்த நாடக பாணி போதுமய்யா! இனிமேல் என் பேரை அழிச்சு எழுத முடியுமா?" நாடார் கை கூப்பினார். அவர் குரலில் இதுவரை காணாத ஒரு அழுத்தம், தைரியம், தீர்மானம் ஒலித்தது. 'ஐயா நல்லா வாழ்ந்துகிட்டிருக்கனும். அவர் பேரும் புகழும் பின்னாலேயும் நிலைச்சு நிக்கனும்! ஆனால் ஐயாவை ஒண்னு சேக்க விரும்பறேன். ஐயா மூலம் வளர்ந்திருக்கும் இந்தக் காய்கறிக்கடை மளிகைக்கடையை அழிக்க முடியுமா? ரெண்டு வருசமா ஐயா ஆசியில் அமோகமா ஒடிட்டிருக்கும் பாத்திரக் கடையை அழிச்சு எளுதறதா?எல்லாக் கடையும் இன்னும் நடத்துகிட்டுத்தா னிருக்கு. நல்லா நடக்குது. தம்பி சென்னையிலே தனியாவே சொந்த வீடு வாங்கி, தனியா சம்சாரம் பண்ணறான். இதெல்லாம் அழிச்சு எளுத முடியுமா? தவிர, எல்லாத்துக்கும் முக்கியம், ஐயா கொடுத்த மஹாலச்சுமித் தகடு இன்னும் மாடத்துலேதான் இருக்குது. அது அப்பிடியேதானே இருக்கு ஏதோ இந்தேன்.இதோ மறைஞ்சு போனேன்னு இல்லியே!” நாடார். நீங்க தாய்னு நினைச்சு குட்டிச் சாத்தானைக் கும்பிடறேங்களோ! பழி என் மேலா?” நாடார் குரல் இன்னும் ஒரு மாத்திரை ஓங்கிற்று. "எனக்கு வந்திருக்கும் நல்லதெல்லாம் இப்படி வரும்னு நினைச்சிருப்பேனா? வந்தபடியே போவறதுக்கும் என்னைக் கேட்டுண்டு போவப் போறதில்லே. நான் யாருக்கும் தீம்பு நினைச்சதில்லே. தீம்பு இழைக்கக்கூட ஓரளவு சாமர்த்தியம் வேணும். அது கூட என்கிட்ட இல்லே. ஆண்டவன் படியளக்கறதுதான். நல்லாத்தான் இனக்கறான். எனக்கு ஒரு குறையுமில்லேங்க. ஜயாவை க, சி. - 5