பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

கல் சிரிக்கிறது


'ஒஹோ! அப்படியா? அப்படியானால், இன்னிக்கு உன் இடம், உள்ளே இவ்வளவு நெருக்கமாயில்லே. கொஞ்சம் வெளியே தள்ளி நில்.’’ அவரைப் பார்க்கப் பார்க்க மணிக்கு உள்ளே கொழுந்து விட்டு எரிந்தது. அவருக்குச் சிவப்பு மின்னல்கள் கர்ப்பக்கிருஹத்தின் இருளில் கண்ணெதிரே கொடி படர்ந்து மறைந்தன. ஆனால் அடக்கிக் கொண்டார். மணி, கோவிலை நான் கோர்ட்டாக மாத்த விரும்பலே. நீ இவ்வளவு துடுக்காகப் பேச வேண்டிய அவசியமுமில்லே, உனக்கே தெரியும். சாஸனப்படி நான் இந்த நிமிஷமே உள்ளே வந்து, உன் கைக் கோவில் மணியைப் பிடுங்கிக்கலாம். இந்த rணமே-' மணிக்குத் தன்னை மட்டுப் படுத்திக் கொள்ள வேண்டிய உசிதம் தோன்றிற்று. ஆனாலும். 'நீ ஏதோ பூச்சி காண்பிச்சிண்டிருக்கையே, அந்த டாகுமென் டையும் நான் பார்த்துடறது நல்லதுன்னு தோணறது.” 'தாராளமா! ஞாயிறு காலை காண்பிக்கறேன். உனக்கே ஒரு நகல் எடுத்தும் கொடுக்கறேன். நீ இங்கு வரையா, நான் உன் வீட்டுக்கு வரட்டுமா?’’ மணிக்கு நிச்சயமாய்ப் படம் படுத்தது. எப்படி யானாலும் சரி' என்று முணுமுணுத்தார். 'நாம் ரெண்டு பேருமே சேர்ந்து தர்மகர்த்தாவிடம் சாஸ்னத்தை ஒப்படைச்சுடுவோம். அப்போ உனக்கு அது குரங்கு நியாயமாயிடும். அப்போத்தான் உனக்கும் பொது நியாயம் தெரியும். நான் வெளியே போய் உட் கார்ந்துக்கறேன். உள்ளே புழுக்கமாத்தானிருக்கு.' மணிக்கு அஸ்தியில் சில் கண்டது இவன் தலை முறைக்கும் குழி பறிக்கிற மாதிரி, அதில் இன்னும் என்னென்ன புதைவானமிருக்கோ! எங்கேயோ புத்தி விருந்த பாம்பு ஜலதாரை வழியா வீட்டுக்குள் புகுந்த