பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

கல் சிரிக்கிறது


மணிக்கு உள்ளே ஏதோ கிடுகிடுத்தது. இவனைப் பத்தி ஒண்னுமே புரிஞ்சுக்க முடியல்லியே! 'தலை வலிக்கிறதா?” ஆம்’ என்று தலையைப் பிடித்துக் கொண்டு, தலையை ஆட்டினார். தொண்டையை லேசாக அடைத் தது. பரிவுதானமாகக் கேட்டு ரொம்ப நாளாச்சுஅதுக்குப் பெரியவாள் வீட்டில் இல்லை. இருக்கிறவாளும் இங்கிதமாயில்லே! 'நீ சரியாயிருக்கையா, நாங்கள் சரியாயிருக்க?' என்கிற அடிப்படையில் நடத்தைகள், நடப்புகள். எனக்குக் கோளாறே இதுதானோ? இவன் என் மன நிலையைப் புரிஞ்சுண்டு அதையே வாத்யம் வாசிக்கிறான். விழியோரம் கண்ணிர் உறுத்திற்று. தர்மராஜன் நகர்ந்து வந்து, அருகில் உட்கார்ந்து கொண்டு, மணியின் நெற்றிப் பொட்டைத் தடவினார். மணிக்கு எங்கோ கொண்டு போயிற்று. துரக்கமா? அரை மயக்கமா? சந்தேகமில்லாமல் தனக்கு இதுவரை அனுபவமில்லாத ஒரு சுக மண்டலம். 'இப்போ எப்படி யிருக்கு?” வெண் மேகங்களின் நடு மத்தியிலிருந்து, மன மில்லாத பதிலில் குரல் புறப்பட்டது. 'ரொம்ப தேவலை, ரொம்ப தேவலை-’’ 3 * } 'மனி: சுற்றிப் பஞ்சு மேகம் படர்ந்து ஆளைச்சுற்றிக் கொண் டிருந்த சுகத்தில், நினைப்புக்குப் பதில் சொல்லக்கூட அலுப்பாயிருந்தது. வாயுள் கூட அந்த மிட்டாய்ப் படர்ச்சி புகுந்து கொண்டது. தித்திக்கவில்லை. ஆனால் வெகு வாசகம். - ' ുണ്ണി|