பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வா.ச.ரா.

3

மூடிக்குப் பால் மாறாதேங்கோ. அத்தோடு உங்களைப் பிடிச்ச பாபத்தில் பாதியை நாங்கள் வாங்கிக்கறோம்னு நினைச்சுக்கோங்கோ.”


“குருக்களே, கோவிச்சுக்கப்படாது.”


'நான் கோவப்படல்லே. நம் நாடு தெய்வத்தின் இருப்பிடம்னு சொல்லிக்கறோம். ஆனால் ஆஸ்திக சிந்தனை எவ்வளவு க்ஷீணமடைஞ்சு போச்சுன்னு நினைக்கறப்போ கஷ்டமாயிருக்கு.


“தட்சிணை கால் ரூபா வெச்சிருக்கேள். இதுக்கு நான் உடைச்ச கடலை வாங்கிக் கொறிக்கிறதா, உருப்படறதா நீங்களே சொல்லுங்கோ. சாமிக்குப்பண்றதுன்னா, கையை யார் பின்னாலே புடிச்சு இழுக்கறாளோ? நீங்கள் கையைத் தளர்த்தினால்தான் அவள் வாரி வழங்க முடியும். வெறுங்கையை முழம் போட முடியுமா? ஆ, வாங்கிண்டு வந்துட்டேளா?”


“அவன் கடையைக் கட்ட ஆரம்பிச்சுட்டான். அதிலேதான் சற்று தாமதம்.”


'அதனாலென்ன? இன்னிக்கு புதன் தானே! புதன் கிழமையே கொஞ்சம் டல்தான். நாளையிலிருந்து பாருங்கோ. உங்கள் அபிஷேகம் வெள்ளிக் கிழமைதானே? தோம்பு சாத்தி-? அஷ்டோத்ரமா, ஸ்கஸ்ரநாமமா? ஸ்கஸ்ரநாமம்தான் சரி. நைவேத்யத்துக்குக் காசாக் கொடுத்தாலும் சரி, சரக்காகக் கொடுத்தாலும் சரி, வீட்டிலே பண்ணிக் கொண்டு வந்துடுவேன். என்னென்னு தனியா விலை பேச முடியுமா? சுண்டல் வாஸிக்கணும்னா, தாளிதத்துலே கொஞ்சம் டால்டா காட்டினால்தான் எடுப்பாயிருக்கும். சர்க்கரைப் பொங்கல் உண்டா? சரி சரி பிள்ளைவாள், தாக்ஷண்யமே வேண்டாம். சாமான்களை நீங்களே வாங்கிக் கொடுத்துடுங்க. உங்கள்கிட்ட காசை வாங்கிட்டு அப்புறம் 'அதிலே முந்திரிப் பருப்பு இல்லையே? நெய் எங்கே? இதுக்கெல்லாம் இடம் வேண்டாம். தெய்வத்துக்கு வஞ்சனை யில்லாமல், என்னால் முடிஞ்-