பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

கல் சிரிக்கிறது

. வந்து காட்டி, விழும் சில்லரையை இடுப்பில் நிமிண்டிப் போம்-மணியோ, நானோ. பெரியப்பா தன் ஏக சிந்தாக்ரஹத்தில் அப்படிக் காத்த தூய்மை தான் இன்னும் அவள் முகத்தில், நெற்றி யில், கன்னங்களில், சிரிப்பில், மோவாய்க் குழிவில் விளையாடுகிறது. இல்லாவிட்டால் நானும் மணியும் அந்த ஆசார சீலத்தைக் கனவிலும் கருத முடியுமா? மூர்த்தி என்னவோ சின்னதுதான். அடி அகலமான மேடையில் ஆரம்பித்து, அது படிப்படியாகக் குறுகி, தாமரையில் அம்பாள் நிற்கிறாள். உத்ஸவர் கிடையாது. ஆகையால் புறப்பாடுகளுக்கு வழியில்லே. நினைத்த அரை நிமிட, கால் வினாடிக்குக் கனத்த தவத்தின் தருணங்கள் அனைத்தும் ஒரு முகமாய் ஆஹTதியான காரணமோ என்னவோ, கமலாம்பிகை, அவளுடைய அழகு ரஹஸ்யம் ப்ரபை போல் அவளைச் சூழ, அதன் நடுவே கமழ்கிறாள். கல்லின் தரமா, இழைப்பின் உயர்வா தெரியவில்லை. உள்ளங் கைக்கு அவள் ஸ்பரிசம் அவ்வளவு மிருது. அடி வாய், அர்த்தத்தில் கவனமில்லாமல், மந்திரங் களைத் தானே உச்சரிக்கின்றது. என்றோ நெஞ்சடியில் புழக்கமில்லாது புதைந்து போன மந்திரங்கள். அவள் தனக்குத் தொடுக்கும் புஷ்பங்களாக வரவழைத்துக் கொள்கிறாள். எண்ணெயை எடுத்து, அவள் அங்கங்கள் மேல் அப்புகையில் மனம் அஞ்சுகிறது. அம்மா, இது எனக்குப் புது அனுபவம். தப்பில்லாமல் செய்யனும்னு சிரமப் படறேன். என் சிரமம் பார்த்தாவது என்னை மன்னிச்சுடு. இவ்வளவு நெருக்கத்தில் உன் முகம் எனக்குக் கண கூசறது. அவள் புன்னகை புரிகிறாள். எண்ணெய்க் காப்பில் மேனி பளபளக்கிறாள். உச்சரிக் கும் மந்திரங்கள் என் கவசம். ஒவ்வொரு அபிஷேகத்துக்கும்-தண்ணிரை வீசி