பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cm)fr。 チ D「s了。 Ž9. அபிஷேகமாச்சு, அலங்காரமாச்சு, இப்போ குடம் ஜலத்துக்கு என்ன வேலை? குடத்தை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறார். ஜனங்கள் அவருக்குப் பாதை விடும் பரிவு, மேலே அலை மோதுகிறது. எல்லோரும் நல்லவர்களே! ஒன்றிரண்டு பெண்டிர் தடாலென்று விழுந்து நமஸ் கரிக்கின்றனர். மணிக்கு நெஞ்சு கொதித்தது. கிணற்றிலிருந்து ஜலத்தை மொண்டு, குடத்தை அவர் தோள் மேல் ஏற்றிக் கொள்கையில் ஒரு கார்-மிடுக்காய் ஒரு திருப்பம் காட்டி வழுக்கிக் கொண்டு வந்து த்வஜ ஸ்தம்பண்டை நின்றது. அதிலிருந்து ஒரு ஆணும், இரண்டு பெண்டிரும் இறங்: கினர் . அவருடைய உலகம் இன்னும் கலையவில்லை. கனவில் நடந்து கொண்டு சன்னதிக்குப் போய்விட்டார். மணி அவர்களை எதிர் கொண்டார். யார் என்று தெரியவில்லை. தெரியனுமா என்ன? 'வாங்கோ, நல்ல சமயம்தான். அர்ச்சனை நடக்கப் போறது.” 'நமக்கும் ஒரு அர்ச்சனை செய்யlங்களா?” இளவல் சிகை மெய்தான் ஆயினும், விக் அணிந்தாற். போல்-ஆண்டவன் கொடுத்திருக்கும் விசாலமான நெற் றியை மெனக்கெட்டு மறைத்து, மயிரை வெட்டிவிட்டிருக் கும் விதத்தில், ஒரு பொய்மை. பொய்மையே வாழ்க்கை யின் நியதியாகப் போய்விட்டது. தொளதொளவென்று தொங்கத் தொங்க, மணிக்கட்டண்டை ரொம்பவும் பிடிப் பாய், ஜிப்பாவுமில்லை, சொக்காயுமில்லை என்று ஒரு