பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

கல் சிரிக்கிறது


அங்கி. பைஜாமாவா, பாண்டா? கீழே இறங்க இறங்க ஒரு யானைக்கால் உள்ளே புகுந்து மிஞ்சும் தாராளம். நாயனக்காரன் போல் இரு கைகளிலும் மின்னும் மோதி ரங்கள். பெரிய மனுஷன் பிள்ளே. அத்தனையும் ஒட் உடைகள். அப்பன் உதிரத்தை உறிஞ்சிக் குடித்துக் கொண்டு ஒட்டடையாவது உடல் நிரம்பியதும், தானே கழண்டு விழுந்துவிடும். ஆனால் இந்த ஒட்டடைகள் விழாது. நான் தான் சக்கையா, சருகா, அவர்கள் சப்பி, அவர்கள் வாயிலிருந்து உதிர்ந்தாகனும். ஒரு சகஸ்ரநாமம் செய்வீங்களா?” இந்த தருமு வந்தாலும் வந்தான், அம்மனுக்கே கிரஹப் பெயர்ச்சியா? ஆனால் இது என்ன, இந்த ரெண்டுங் கெட்டான் வேளையில், இந்த அரை குடம் பெரிய அர்ச்சனை கேட் கறது? இனிமேல் இதுக்குத் தனியா அபிஷேகம், நைவேத் யம, அப்புறம் அர்ச்சனை-சொல்லி அனுப்பிச்சாலும் சீறி விழுவாளே! 'இத்தனை நாழிக்கு மேல் சுண்டலாம், பொங்கலாம். எப்போ ஊர்றது, எப்போ வேகறது? மூல வருக்குப் பின்னால் செங்கல் அடுப்பு வெச்சு ரவா உப்புமா-அங்கேயே சாமான் வாங்கி-கிளறி உங்கள் அம்மனுக்கு வையுங்கோ' என்பாளே! முதலில் வீட்டி லேயே இருக்காளோ இல்லையோ? எந்த சினிமாவில், எந்த க்யூவில் போய்த் தேடுவது? நல்ல வேளை, அந்த இரு பெண்டிரில் மூதானவள் அவன் ஆபத்துக்கு சஹாயமாக வந்து விட்டாள். "என்ன மாப்பிள்ளே, அவ்வளவுதான், கால் விட்டுப் போயிடும். வந்த இடத்தில் உங்களுக்குத் திடீர் நினைப் பெடுத்ததுக்கு ஏதோ ஒரு அஷ்டோத்திரத்தைப் பண்ணிட் டுப் போவோமா-ஏதோ பெரிய அடியாப் போடறேளே!’ "உங்களுக்குக் கால் நோவெடுத்தால் - நீங்க கார்லே குந்திட்டிருங்க- நாங்க தரிசனம் பண்றோம்.'