பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

கல் சிரிக்கிறது


"அதுவும் ஒரு ஐடியாதான். அந்த ப்ரசாதத்தைக் கூட ரிஸெப்ஷன்லே கொடுத்துட்டுப் போயிடுங்க. எவ. னாச்சும் ஆல் நைட் உட்கார்ந்திருப்பான். காலையில் நாங்க வாங்கிக்கிறோம்.' 'பல்லை விளக்கிட்டு வாங்கிக்கங்க-' கண்கள் ஒரு கணம் பகையில் சந்தித்தன. (இப்படியும் நம் பிழைப்பு இருக்கனுமா?)

    • سrrfrزی * ،
  • * Grদুস চেঞ্জ ? ? ?

'உங்கள் ஆர்டர் ரொம்ப லேட். அதனாலே அதுக்குத் தகுந்த சிரமம் இருக்கு. இன்னும் ஒரு அம்பது தேவைப் படும். வெள்ளிக் கிழமை அம்பாளுக்குப் புடவை சார்த் தினால் ரொம்ப விசேஷம்-' "எனக்குத் தெரியும். நீங்கள் பிடுங்க ஆரம்பிச்சுட் உங்கன்னா, விட மாட்டீங்க. வீச் தான்- ஒரு முழு நோட்டை உண்மையாகவே அவன் வீசியெறிந்தான். 'கை தவர்றது - அதிர்ஷ்டம்' மணி குனிந்து பொறுக்கி எடுத்துக் கொண்டார். நீ திட்டிக்கோ-இந்த ரீதியில் ரெண்டு அடி கொடுத்தாலும் வாங்கிக்கறேன். திட்டத் திட்டத் திண்டுக்கல். குட்டக் குட்டக் குண்டக்கல். வீச்சாமே! அதென்ன வீச்? வா வா, நடு ராத்திரியிலே உன்னைத் தேடிண்டு வந்து குங்குமப் பொட்டலம் கொடுக்கப் போறேன்னு கனாக் கண்டிண்டிரு! அப்பன் சொத்தை அழிக்கப் பொறந்தவங்க! 'உள்ளே வாங்கோளேன். அர்ச்சனை நடக்கறது. அம்பாளைத் தரிசனம் பண்ணுங்கள். உங்கள் தீபாரா கினையை முன்னால் காட்டச் சொல்றேன்.' நடந்து கொண்டே :